• Nov 25 2024

போலி கல்வி நிலையம் !!! பணிப்பாளர் அதிரடி கைது! samugammedia

Tamil nila / Dec 5th 2023, 8:40 pm
image

கொழும்பில் போலியான பட்டப்படிப்புப்பாடநெறிகளை வழங்குவதாக மோசடியில் ஈடுபட்ட கல்வி நிலையம் ஒன்றை நடத்தி வந்த பெண்,  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு,  பாடநெறிகளை வழங்குவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட கல்வி நிலையத்தை நடத்தி வந்த 24 வயது பெண் , இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதாவது  , குறித்த கல்வி நிலையத்தின் மீது வழங்கப்பட்ட புகார்களை அடிப்படையாகக் கொண்டு கடந்த நவம்பர் 27 ஆம் திகதி பொலிஸார்  விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இதன் போது கொழும்பு பம்பலப்பிட்டி லொரீஸ் வீதியிலுள்ள ‘எவல்வ் காலேஜ் ஆஃப் எஜுகேஷன் ’ (Evolve College of Education) இல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது 

அதாவது, குறித்த நிறுவனத்திற்கு எதிராகவும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரிற்கு எதிராகவும் 43 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 

100 இற்கும் அதிகமானோர் மோசடியில் சிக்கியுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது . 

மேலும், கல்வி நிலையத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனை கைது செய்ய பம்பலப்பிட்டி பொலிஸார்  விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் குறிப்பிடத்தக்கது .


போலி கல்வி நிலையம் பணிப்பாளர் அதிரடி கைது samugammedia கொழும்பில் போலியான பட்டப்படிப்புப்பாடநெறிகளை வழங்குவதாக மோசடியில் ஈடுபட்ட கல்வி நிலையம் ஒன்றை நடத்தி வந்த பெண்,  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு,  பாடநெறிகளை வழங்குவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட கல்வி நிலையத்தை நடத்தி வந்த 24 வயது பெண் , இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அதாவது  , குறித்த கல்வி நிலையத்தின் மீது வழங்கப்பட்ட புகார்களை அடிப்படையாகக் கொண்டு கடந்த நவம்பர் 27 ஆம் திகதி பொலிஸார்  விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.இதன் போது கொழும்பு பம்பலப்பிட்டி லொரீஸ் வீதியிலுள்ள ‘எவல்வ் காலேஜ் ஆஃப் எஜுகேஷன் ’ (Evolve College of Education) இல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது அதாவது, குறித்த நிறுவனத்திற்கு எதிராகவும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரிற்கு எதிராகவும் 43 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 100 இற்கும் அதிகமானோர் மோசடியில் சிக்கியுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது . மேலும், கல்வி நிலையத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனை கைது செய்ய பம்பலப்பிட்டி பொலிஸார்  விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் குறிப்பிடத்தக்கது .

Advertisement

Advertisement

Advertisement