• Jan 25 2025

3 நாட்கள் காய்ச்சல் - குடும்பஸ்தர் உயிரிழப்பு!

Tamil nila / Dec 9th 2024, 8:42 pm
image

யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வரணி வடக்கு, வரணி பகுதியை சேர்ந்த கோகிலான் தவராசா என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் தொடர்ந்து மூன்று தினங்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார். காய்ச்சலுக்கு வரணி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் மூச்சு விட அவருக்கு சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் சிகிச்சைக்காக மண்டையை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

நேற்றைய தினம் அவர் மந்திகை வைத்தியசாலையில் மயங்கிய நிலையில் இன்று காலை, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற் கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

3 நாட்கள் காய்ச்சல் - குடும்பஸ்தர் உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வரணி வடக்கு, வரணி பகுதியை சேர்ந்த கோகிலான் தவராசா என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,இவர் தொடர்ந்து மூன்று தினங்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார். காய்ச்சலுக்கு வரணி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் மூச்சு விட அவருக்கு சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் சிகிச்சைக்காக மண்டையை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.நேற்றைய தினம் அவர் மந்திகை வைத்தியசாலையில் மயங்கிய நிலையில் இன்று காலை, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற் கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement