• Jun 27 2024

மனைவியையும் பிள்ளைகளையும் தாக்க முயன்ற தந்தை மரணம்..! இலங்கையில் இன்று சம்பவம்

Chithra / Jun 20th 2024, 3:25 pm
image

Advertisement


காலி -  எல்பிட்டிய, தலாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று  அதிகாலை ஏற்பட்ட தீ பரவலில் இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எல்பிட்டிய, தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இவர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் மது போதையில் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ள நிலையில்,

மண்வெட்டி ஒன்றினால் தனது மனைவியையும், பிள்ளைகளையும் தாக்க முயன்றுள்ளார்.

இதன்போது, மனைவியும் பிள்ளைகளும் உயிர் தப்புவதற்காக அயல் வீட்டிற்குத் தப்பிச் சென்று தலைமறைவாக இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, மது போதையில் தந்தை வீட்டில் இருந்த வேளை, திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது

இதனையடுத்து, தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனையிட்ட போது வீட்டின் அறையொன்றில் எரிந்த நிலையில் குறித்த நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியையும் பிள்ளைகளையும் தாக்க முயன்ற தந்தை மரணம். இலங்கையில் இன்று சம்பவம் காலி -  எல்பிட்டிய, தலாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று  அதிகாலை ஏற்பட்ட தீ பரவலில் இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.எல்பிட்டிய, தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,இவர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் மது போதையில் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ள நிலையில்,மண்வெட்டி ஒன்றினால் தனது மனைவியையும், பிள்ளைகளையும் தாக்க முயன்றுள்ளார்.இதன்போது, மனைவியும் பிள்ளைகளும் உயிர் தப்புவதற்காக அயல் வீட்டிற்குத் தப்பிச் சென்று தலைமறைவாக இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதன்போது, மது போதையில் தந்தை வீட்டில் இருந்த வேளை, திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளதுஇதனையடுத்து, தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனையிட்ட போது வீட்டின் அறையொன்றில் எரிந்த நிலையில் குறித்த நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement