• May 06 2025

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நாளை ஆரம்பம்..!

Chithra / Oct 3rd 2024, 11:53 am
image

 

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நாளை (04) ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக இதுவரை 58 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திகாமடுல்ல மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகளவான சுயேட்சைக் குழுக்கள் இவ்வாறு கட்டுப்பணத்தினை வைப்பிலிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வரும் 8ம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி நடைபெற உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நாளை ஆரம்பம்.  2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நாளை (04) ஆரம்பமாகவுள்ளது.இதன்படி எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக இதுவரை 58 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திகாமடுல்ல மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகளவான சுயேட்சைக் குழுக்கள் இவ்வாறு கட்டுப்பணத்தினை வைப்பிலிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி வரும் 8ம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now