• May 05 2025

சம்பந்தனுக்கு பாராளுமன்றில் இறுதி அஞ்சலி...! எம்.பிகளிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை...!

Sharmi / Jul 2nd 2024, 11:23 am
image

பாராளுமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனின் பூதவுடலுக்கு  நாளை(03)  பாராளுமன்றத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்படவிருப்பதால், இதில் கலந்துகொள்ளுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர சகல பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இரா. சம்பந்தனின் பூவுடல் இறுதி அஞ்சலிக்காக நளை பி.ப 2.00 மணி முதல் பி.ப 4.00 மணிவரை பாராளுமன்ற கட்டடத்தின் முன்பக்கத்திலுள்ள ஒன்றுகூடல் மண்டபத்தில் வைக்கப்படவுள்ளது.

இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற பணியாட் தொகுதியினர் மற்றும் பாராளுமன்றத்துடன் இணைந்த சேவைகளின் பணியாளர்களிடம் செயலாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சம்பந்தனுக்கு பாராளுமன்றில் இறுதி அஞ்சலி. எம்.பிகளிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை. பாராளுமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனின் பூதவுடலுக்கு  நாளை(03)  பாராளுமன்றத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்படவிருப்பதால், இதில் கலந்துகொள்ளுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர சகல பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.இரா. சம்பந்தனின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக நளை பி.ப 2.00 மணி முதல் பி.ப 4.00 மணிவரை பாராளுமன்ற கட்டடத்தின் முன்பக்கத்திலுள்ள ஒன்றுகூடல் மண்டபத்தில் வைக்கப்படவுள்ளது.இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற பணியாட் தொகுதியினர் மற்றும் பாராளுமன்றத்துடன் இணைந்த சேவைகளின் பணியாளர்களிடம் செயலாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now