நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை - கெரண்டிஎல்ல பகுதியில் கடந்த வருடம் மே மாதம் 11 ஆம் திகதி இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்தொன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இவ்விபத்து இடம்பெற்று இன்றுடன் (11) ஓராண்டு நிறைவடைவதையொட்டி உயிரிழந்தவர்களுக்கு ஆத்ம சாந்தியும், காயமடைந்தவர்களுக்கு ஆசீர்வாதமும் வேண்டி விபத்து நடந்த இடத்திலேயே விசேட மத வழிபாடுகள் நடத்தப்பட்டன.
கொத்மலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் இந்திகா லலித் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் கொத்மலை பகுதி மக்களுடன் இணைந்து இந்த வழிபாட்டை ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்து விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த ஒரு குழந்தையை விபத்து நடந்த இடத்திலிருந்து மீட்கவும், அக்குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டிய உள்ளூர் பெண் ஒருவருக்கு பரிசு வழங்கவும் பொலிஸார் இதன்போது நடவடிக்கை எடுத்திருந்தனர்.
குறித்த நிகழ்வில் கொத்மலை மாவட்டச் செயலாளர் நதீரா லக்மால், சர்வமத தலைவர்கள், பிரதேச அரசியல் பிரமுகர்கள், பொலிஸார், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மசாந்திக்காக விசேடமாக பிரார்த்தனையும் செய்யப்பட்டது.
குருணாகலிலிருந்து நுவரெலியா வழியாக கதிர்காமம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்றே இவ்வாறு விபத்திற்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.
கொத்மலை பஸ் விபத்தின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்; உயிரிழந்தோருக்கு விசேட மத வழிபாடு நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை - கெரண்டிஎல்ல பகுதியில் கடந்த வருடம் மே மாதம் 11 ஆம் திகதி இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்தொன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.இவ்விபத்து இடம்பெற்று இன்றுடன் (11) ஓராண்டு நிறைவடைவதையொட்டி உயிரிழந்தவர்களுக்கு ஆத்ம சாந்தியும், காயமடைந்தவர்களுக்கு ஆசீர்வாதமும் வேண்டி விபத்து நடந்த இடத்திலேயே விசேட மத வழிபாடுகள் நடத்தப்பட்டன.கொத்மலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் இந்திகா லலித் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் கொத்மலை பகுதி மக்களுடன் இணைந்து இந்த வழிபாட்டை ஏற்பாடு செய்திருந்தனர்.குறித்து விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த ஒரு குழந்தையை விபத்து நடந்த இடத்திலிருந்து மீட்கவும், அக்குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டிய உள்ளூர் பெண் ஒருவருக்கு பரிசு வழங்கவும் பொலிஸார் இதன்போது நடவடிக்கை எடுத்திருந்தனர்.குறித்த நிகழ்வில் கொத்மலை மாவட்டச் செயலாளர் நதீரா லக்மால், சர்வமத தலைவர்கள், பிரதேச அரசியல் பிரமுகர்கள், பொலிஸார், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மசாந்திக்காக விசேடமாக பிரார்த்தனையும் செய்யப்பட்டது.குருணாகலிலிருந்து நுவரெலியா வழியாக கதிர்காமம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்றே இவ்வாறு விபத்திற்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.