• Nov 22 2024

பிரித்தானிய தேர்தலில் வரலாற்று சாதனை - நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கபோகும் முதலாவது ஈழத் தமிழ் பெண்

UK
Chithra / Jul 5th 2024, 12:07 pm
image

 

 

பிரித்தானியாவில்  தொழிற்கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் நிலையில்  தொழிற்கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழ் பெண் உமா குமரன்  ஸ்ராட்போட் அன்ட் பௌவ்  தொகுதியில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது, உமா குமரன் தன்னுடன் போட்டியிட்ட வேட்பாளர்களை விட பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளதுடன், அவருக்கு 19,145 வாக்குகள் கிட்டியுள்ளன.

அதன் படி, இது அந்த தொகுதியில் கிட்டிய வாக்குகளில் 44.1 வீதமாகும்.

இதன் மூலம், ஈழத்தமிழ் பூர்வீகத்தையும் தமிழ் உணர்வையும் கொண்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினராக கனடாவுக்கு அடுத்தபடியாக பிரித்தானியாவிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உருவாகியுள்ளார்.

இதேவேளை, இன்னொரு ஈழத்தமிழ் பூர்வீக வேட்பாளரான கிறிஷ்னி ரிசிகரன் லிப்டெம் எனப்படும் தாராளவாத ஜனநாயக கட்சியிடம் வெற்றி வாய்ப்பை தவறவிட்டுள்ளார். அவருக்கு 8,430 வாக்குகள் கிட்டியுள்ளன.

பிரித்தானிய தேர்தலில் வரலாற்று சாதனை - நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கபோகும் முதலாவது ஈழத் தமிழ் பெண்   பிரித்தானியாவில்  தொழிற்கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் நிலையில்  தொழிற்கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழ் பெண் உமா குமரன்  ஸ்ராட்போட் அன்ட் பௌவ்  தொகுதியில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இதன் போது, உமா குமரன் தன்னுடன் போட்டியிட்ட வேட்பாளர்களை விட பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளதுடன், அவருக்கு 19,145 வாக்குகள் கிட்டியுள்ளன.அதன் படி, இது அந்த தொகுதியில் கிட்டிய வாக்குகளில் 44.1 வீதமாகும்.இதன் மூலம், ஈழத்தமிழ் பூர்வீகத்தையும் தமிழ் உணர்வையும் கொண்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினராக கனடாவுக்கு அடுத்தபடியாக பிரித்தானியாவிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உருவாகியுள்ளார்.இதேவேளை, இன்னொரு ஈழத்தமிழ் பூர்வீக வேட்பாளரான கிறிஷ்னி ரிசிகரன் லிப்டெம் எனப்படும் தாராளவாத ஜனநாயக கட்சியிடம் வெற்றி வாய்ப்பை தவறவிட்டுள்ளார். அவருக்கு 8,430 வாக்குகள் கிட்டியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement