மலையகத்தில் முதல் முறையாக பாடசாலைகளுக்கிடையிலான கடினப்பந்து கிரிக்கெட் போட்டியானது கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் நாவலப்பிட்டிய கதிரேசன் மத்திய கல்லூரி என்பவற்றுக்கிடையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப் போட்டிக்கான கிண்ண அறிமுக நிகழ்வு கொட்டகலை ரிஷிகேஷ் மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக இடம்பெற்றது.
இதன்போது பிரதம அதிதியாக கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த், நுவரெலிய மாவட்ட கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவர் ராமசாமி பிரபாகரன், கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர் நந்தகோபால் பாஸ்கரன், கொட்டகலை த.ம.வியின் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் ராகுல், திம்புளை பத்தனை பொலிஸ் அதிகாரி, பொருளாளர் நவா, கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர், நாவலப்பிட்டிய கதிரேசன் மத்திய கல்லூரியின் அதிபர், முன்னாள் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
மலையகத்தில் முதல் முறையாக கடினப்பந்து கிரிக்கெட் போட்டி மலையகத்தில் முதல் முறையாக பாடசாலைகளுக்கிடையிலான கடினப்பந்து கிரிக்கெட் போட்டியானது கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் நாவலப்பிட்டிய கதிரேசன் மத்திய கல்லூரி என்பவற்றுக்கிடையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப் போட்டிக்கான கிண்ண அறிமுக நிகழ்வு கொட்டகலை ரிஷிகேஷ் மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக இடம்பெற்றது. இதன்போது பிரதம அதிதியாக கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த், நுவரெலிய மாவட்ட கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவர் ராமசாமி பிரபாகரன், கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர் நந்தகோபால் பாஸ்கரன், கொட்டகலை த.ம.வியின் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் ராகுல், திம்புளை பத்தனை பொலிஸ் அதிகாரி, பொருளாளர் நவா, கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர், நாவலப்பிட்டிய கதிரேசன் மத்திய கல்லூரியின் அதிபர், முன்னாள் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.