• Sep 11 2026

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் பக்தி பரவசத்துடன் கொடியேற்றம்

Chithra / Sep 11th 2026, 1:36 pm
image


வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ கொடியேற்றம் இன்று (11) காலை 9 மணியளவில் சிறப்பாக இடம்பெற்றது.


இதனையொட்டி இன்று காலை 7 மணியளவில் விசேட பூசைகள் இடம்பெற்றதுடன், காலை 8 மணியளவில் வசந்த மண்டப பூசைகளும் நடைபெற்றன. தொடர்ந்து சரியாக காலை 9 மணியளவில் ஆலய கொடியேற்றம் இடம்பெற்றது.


கணபதீசுவரக் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் விசேட கிரியைகளை முன்னெடுத்தனர்.


எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி வரை சக்கரத்து ஆழ்வார் உள்வீதி உலா இடம்பெறவுள்ளதுடன், 7ஆம் திருவிழாவான செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் வெளிவீதி உலாவும் இடம்பெறவுள்ளது.


அதனைத் தொடர்ந்து, செப்டெம்பர் 17ஆம் திகதி 8ஆம் திருவிழாவாக குருக்கட்டு விநாயகர் தரிசனமும், செப்டெம்பர் 19ஆம் திகதி 9ஆம் திருவிழாவாக வெண்ணைத் திருவிழாவும், செப்டெம்பர் 20ஆம் திகதி 10ஆம் திருவிழாவாக துகியுத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.


செப்டெம்பர் 21ஆம் திகதி 11ஆம் திருவிழாவாக கம்சன் போர் திருவிழாவும், செப்டெம்பர் 23ஆம் திகதி 13ஆம் திருவிழாவாக வேட்டைத் திருவிழாவும், செப்டெம்பர் 24ஆம் திகதி 14ஆம் திருவிழாவாக சப்றறத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.


செப்டெம்பர் 25ஆம் திகதி 15ஆம் திருவிழாவாக தேர்த்திருவிழாவும், செப்டெம்பர் 26ஆம் திகதி 16ஆம் திருவிழாவாக சமுத்திர தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.


இறுதியாக செப்டெம்பர் 27ஆம் திகதி 17ஆம் திருவிழாவாக கேணி/பட்டு தீர்த்தத் திருவிழாவும், கொடியிறக்க நிகழ்வும் இடம்பெறவுள்ளன.


திருவிழாவை முன்னிட்டு சுகாதார வசதிகளை பருத்தித்துறை பிரதேச சபை மேற்கொண்டுள்ளதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


மேலும், ஒருங்கிணைப்பு மற்றும் தேவையான வசதிகளை வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் மேற்கொண்டுள்ளதுடன், விசேட போக்குவரத்து ஒழுங்குகளை பருத்தித்துறை இலங்கை போக்குவரத்துச் சாலை மற்றும் தனியார் போக்குவரத்து சேவை சங்கங்கள் மேற்கொண்டுள்ளன.


வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் பக்தி பரவசத்துடன் கொடியேற்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ கொடியேற்றம் இன்று (11) காலை 9 மணியளவில் சிறப்பாக இடம்பெற்றது.இதனையொட்டி இன்று காலை 7 மணியளவில் விசேட பூசைகள் இடம்பெற்றதுடன், காலை 8 மணியளவில் வசந்த மண்டப பூசைகளும் நடைபெற்றன. தொடர்ந்து சரியாக காலை 9 மணியளவில் ஆலய கொடியேற்றம் இடம்பெற்றது.கணபதீசுவரக் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் விசேட கிரியைகளை முன்னெடுத்தனர்.எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி வரை சக்கரத்து ஆழ்வார் உள்வீதி உலா இடம்பெறவுள்ளதுடன், 7ஆம் திருவிழாவான செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் வெளிவீதி உலாவும் இடம்பெறவுள்ளது.அதனைத் தொடர்ந்து, செப்டெம்பர் 17ஆம் திகதி 8ஆம் திருவிழாவாக குருக்கட்டு விநாயகர் தரிசனமும், செப்டெம்பர் 19ஆம் திகதி 9ஆம் திருவிழாவாக வெண்ணைத் திருவிழாவும், செப்டெம்பர் 20ஆம் திகதி 10ஆம் திருவிழாவாக துகியுத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.செப்டெம்பர் 21ஆம் திகதி 11ஆம் திருவிழாவாக கம்சன் போர் திருவிழாவும், செப்டெம்பர் 23ஆம் திகதி 13ஆம் திருவிழாவாக வேட்டைத் திருவிழாவும், செப்டெம்பர் 24ஆம் திகதி 14ஆம் திருவிழாவாக சப்றறத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.செப்டெம்பர் 25ஆம் திகதி 15ஆம் திருவிழாவாக தேர்த்திருவிழாவும், செப்டெம்பர் 26ஆம் திகதி 16ஆம் திருவிழாவாக சமுத்திர தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.இறுதியாக செப்டெம்பர் 27ஆம் திகதி 17ஆம் திருவிழாவாக கேணி/பட்டு தீர்த்தத் திருவிழாவும், கொடியிறக்க நிகழ்வும் இடம்பெறவுள்ளன.திருவிழாவை முன்னிட்டு சுகாதார வசதிகளை பருத்தித்துறை பிரதேச சபை மேற்கொண்டுள்ளதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.மேலும், ஒருங்கிணைப்பு மற்றும் தேவையான வசதிகளை வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் மேற்கொண்டுள்ளதுடன், விசேட போக்குவரத்து ஒழுங்குகளை பருத்தித்துறை இலங்கை போக்குவரத்துச் சாலை மற்றும் தனியார் போக்குவரத்து சேவை சங்கங்கள் மேற்கொண்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement