கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் சென்னைக்கு நேற்று காலை பயணிக்கவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திடீரென இரத்துச் செய்யப்பட்டமையினால் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
226 பயணிகளுடன் நேற்று காலை 7.20 மணிக்கு சென்னைக்கு புறப்படவிருந்த U.L என்ற ஸ்ரீலங்கன் விமானமே எந்தவித முன்னறிவிப்புமின்றி பயணத்தினை இரத்து செய்துள்ளது.
இதன் காரணமாக பயணிகள் அனைவரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இது தொடர்பில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன தொடர்பாடல் முகாமையாளர் தீபால் வி. பெரேரா விளக்கமளிக்கையில்,
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் திடீரென இரத்து செய்யப்பட்டதுடன்,
பயணிகள் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டு வேறு விமானத்தில் பின்னர் அனுப்பிவைக்கப்பட்டனர்.
மேலும், இந்த இடையூறுகளுக்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
திடீரென இரத்து செய்யப்பட்ட சென்னைக்கான விமான சேவை. பயணிகள் பெரும் அசௌகரியம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் சென்னைக்கு நேற்று காலை பயணிக்கவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திடீரென இரத்துச் செய்யப்பட்டமையினால் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.226 பயணிகளுடன் நேற்று காலை 7.20 மணிக்கு சென்னைக்கு புறப்படவிருந்த U.L என்ற ஸ்ரீலங்கன் விமானமே எந்தவித முன்னறிவிப்புமின்றி பயணத்தினை இரத்து செய்துள்ளது.இதன் காரணமாக பயணிகள் அனைவரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருந்ததாகவும் கூறப்படுகின்றது. இது தொடர்பில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன தொடர்பாடல் முகாமையாளர் தீபால் வி. பெரேரா விளக்கமளிக்கையில்,தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் திடீரென இரத்து செய்யப்பட்டதுடன், பயணிகள் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டு வேறு விமானத்தில் பின்னர் அனுப்பிவைக்கப்பட்டனர்.மேலும், இந்த இடையூறுகளுக்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.