• Nov 26 2024

மட்டக்களப்பில் வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலப் பகுதிகள்...! ஆரம்பமான படகு சேவை...! samugammedia

Sharmi / Jan 11th 2024, 3:34 pm
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

கிரான் பிரதேச செயலகப் பிரிவில் கிண்ணையடி தொடக்கம் பிரம்படித் தீவு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் படகு சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

படகில் பொருத்தப்பட்டுள்ள இயந்திரம் அடிக்கடி கோளாறு ஏற்படுவதன் காரணமாக போக்குவரத்தில் பயணிகள் சிரமத்தினை எதிர்நோக்கி வருகின்றனர்.

புலிபாய்ந்த கல் பிரதான வீதியில் கோஸ்வே நீர் நிரம்பி காணப்படுவதனால் பொண்டுகல் சேனை,குடும்பிமலை,கோராவெளி,பூலாக்காடு போன்ற பல்வேறு கிராமங்களுக்கிடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இடைத்தங்கல் முகாம்களில் சுமார் 250 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கான உலர் உணவுகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. கிரான் பிரதேச செயலாளர் கே.சித்திரவேல் உள்ளிட்ட குழுவினர் பாதிக்கப்பட்ட இடங்களை மற்றும் மக்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுக்கான உலர் உணவு பொதிகள் விநியோக நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

கிரான் பிரதேச செயலக நிர்வாக நடவடிக்கைகள் தற்காலிமாக கோரகல்லிமடு பிரதேசத்தில் இயங்கி வருகிறது.

இதேவேளை புணானையில் புகையிரத கடவைகளை வெள்ள நீர் ஊடறுத்து செல்வதனால் மட்டக்களப்பு கொழும்பு புகையிரத சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று மன்னம்பிட்டி பகுதியிலும் வீதியின் மேலால் வெள்ள நீர் பாய்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் ஈரளக்குளம் மற்றும் மயிலவெட்டுவான் போக்குவரத்து பாதிப்பு.சித்தாண்டி மற்றும் பெருமாவெளி போக்குவரத்து பாதிப்பு படகு சேவைகள் இடம்பெற்று வருகிறது.வாகரையில் கல்லரிப்பு பிரதேசம் ஆற்று வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


மட்டக்களப்பில் வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலப் பகுதிகள். ஆரம்பமான படகு சேவை. samugammedia மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.கிரான் பிரதேச செயலகப் பிரிவில் கிண்ணையடி தொடக்கம் பிரம்படித் தீவு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் படகு சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.படகில் பொருத்தப்பட்டுள்ள இயந்திரம் அடிக்கடி கோளாறு ஏற்படுவதன் காரணமாக போக்குவரத்தில் பயணிகள் சிரமத்தினை எதிர்நோக்கி வருகின்றனர்.புலிபாய்ந்த கல் பிரதான வீதியில் கோஸ்வே நீர் நிரம்பி காணப்படுவதனால் பொண்டுகல் சேனை,குடும்பிமலை,கோராவெளி,பூலாக்காடு போன்ற பல்வேறு கிராமங்களுக்கிடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.இடைத்தங்கல் முகாம்களில் சுமார் 250 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கான உலர் உணவுகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. கிரான் பிரதேச செயலாளர் கே.சித்திரவேல் உள்ளிட்ட குழுவினர் பாதிக்கப்பட்ட இடங்களை மற்றும் மக்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுக்கான உலர் உணவு பொதிகள் விநியோக நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.கிரான் பிரதேச செயலக நிர்வாக நடவடிக்கைகள் தற்காலிமாக கோரகல்லிமடு பிரதேசத்தில் இயங்கி வருகிறது.இதேவேளை புணானையில் புகையிரத கடவைகளை வெள்ள நீர் ஊடறுத்து செல்வதனால் மட்டக்களப்பு கொழும்பு புகையிரத சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.இதேபோன்று மன்னம்பிட்டி பகுதியிலும் வீதியின் மேலால் வெள்ள நீர் பாய்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் ஈரளக்குளம் மற்றும் மயிலவெட்டுவான் போக்குவரத்து பாதிப்பு.சித்தாண்டி மற்றும் பெருமாவெளி போக்குவரத்து பாதிப்பு படகு சேவைகள் இடம்பெற்று வருகிறது.வாகரையில் கல்லரிப்பு பிரதேசம் ஆற்று வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement