தமிழக இளைஞன் ஒருவர் வெறும் 7000 ரூபா செலவில் விமானமொன்றைத் தயாரித்து பறக்கவிட்டுள்ளார்.
தமிழகத்தின் பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்த அவனிஷ் குமார் என்ற இளைஞனே தனது திறமையைப் பயன்படுத்தி விமானத்தை தயாரித்துள்ளார்.
கைவிடப்பட்ட ஸ்கிராப் பொருட்கள் மற்றும் அடிப்படை இயக்கவியல்களை மட்டுமே பயன்படுத்தி குறித்த பறக்கும் விமான மாதிரியை உருவாக்கியுள்ளார்.
முறையான பயிற்சி எதனையும் மேற்கொள்ளாமல் தனது சொந்த முயற்சியால் இந்த விமான மாதிரியை உருவாக்கி பறக்க விட்டுள்ளார்.
இளைஞன் விமானத்தை உருவாக்க வெறும் ஏழு நாட்களை மட்டுமே எடுத்துள்ளார். அத்துடன் விமானத்திற்கான மொத்த செலவும் 7,000 ரூபா எனத் தெரிவித்துள்ளார்.
அவரது விமானம் 300 அடி வரை பறக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. குறைந்த வளங்கள் மற்றும் நிறுவன ஆதரவு இல்லாமல் தனது திறமையை மட்டும் வைத்து விமானத்தை குறித்த இளைஞர் உருவாக்கியுள்ளார்.
விமானத்தை உருவாக்கிய பின்னர் பரந்த தரைப்பகுதியில் விமானத்தை பறக்கவிட்டு பரிசோதனை செய்துள்ளார்.
அவரது முயற்சியில் விமானம் எந்தவொரு தடைகளுமின்றி மேலெழுந்து பறந்தது. இளைஞனின் பறக்கும் விமானத்தைக் காண நூற்றுக்கணக்கானோர் சென்று பார்வையிட்டனர்.
இளைஞனின் 7000 ரூபா செலவிலான விமானம் வெற்றிகரமாக பறக்கும் காட்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
அத்துடன் இளைஞனின் தனிப்பட்ட முயற்சிக்கு தமிழகம் மட்டுமன்றி பலரும் தமது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
7,000 ரூபா செலவில் பறக்கும் விமானம்; தமிழக இளைஞனின் தனிப்பட்ட முயற்சி தமிழக இளைஞன் ஒருவர் வெறும் 7000 ரூபா செலவில் விமானமொன்றைத் தயாரித்து பறக்கவிட்டுள்ளார். தமிழகத்தின் பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்த அவனிஷ் குமார் என்ற இளைஞனே தனது திறமையைப் பயன்படுத்தி விமானத்தை தயாரித்துள்ளார். கைவிடப்பட்ட ஸ்கிராப் பொருட்கள் மற்றும் அடிப்படை இயக்கவியல்களை மட்டுமே பயன்படுத்தி குறித்த பறக்கும் விமான மாதிரியை உருவாக்கியுள்ளார். முறையான பயிற்சி எதனையும் மேற்கொள்ளாமல் தனது சொந்த முயற்சியால் இந்த விமான மாதிரியை உருவாக்கி பறக்க விட்டுள்ளார். இளைஞன் விமானத்தை உருவாக்க வெறும் ஏழு நாட்களை மட்டுமே எடுத்துள்ளார். அத்துடன் விமானத்திற்கான மொத்த செலவும் 7,000 ரூபா எனத் தெரிவித்துள்ளார்.அவரது விமானம் 300 அடி வரை பறக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. குறைந்த வளங்கள் மற்றும் நிறுவன ஆதரவு இல்லாமல் தனது திறமையை மட்டும் வைத்து விமானத்தை குறித்த இளைஞர் உருவாக்கியுள்ளார். விமானத்தை உருவாக்கிய பின்னர் பரந்த தரைப்பகுதியில் விமானத்தை பறக்கவிட்டு பரிசோதனை செய்துள்ளார். அவரது முயற்சியில் விமானம் எந்தவொரு தடைகளுமின்றி மேலெழுந்து பறந்தது. இளைஞனின் பறக்கும் விமானத்தைக் காண நூற்றுக்கணக்கானோர் சென்று பார்வையிட்டனர். இளைஞனின் 7000 ரூபா செலவிலான விமானம் வெற்றிகரமாக பறக்கும் காட்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. அத்துடன் இளைஞனின் தனிப்பட்ட முயற்சிக்கு தமிழகம் மட்டுமன்றி பலரும் தமது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.