• Jan 09 2025

97 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்னுடன் கட்டுநாயக்கவில் சிக்கிய வெளிநாட்டவர்..!

Chithra / Jan 8th 2025, 10:56 am
image

 

97 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை தனது பயணப்பெட்டியில் மறைத்துக்கொண்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

66 வயதான பொஸ்னியா பிரஜை ஒருவர் இன்று (08) காலை விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தனது பயணப் பெட்டிக்குள் கால்களை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் 114 பிரஷ்களுக்குள் 2 கிலோ 759 கிராம் கொக்கெய்னை மிக நுணுக்கமாக மறைத்து வைத்திருந்தார்.

அவர் கொலம்பியாவிலிருந்து குறித்த போதைப்பொருளுடன் பயணிக்கத் தொடங்கி கட்டாரின் டோஹாவுக்கு வருகைதந்துள்ளார்.

அங்கிருந்து இன்று அதிகாலை 02.40 மணியளவில் கட்டார் எயார்வேஸ் விமானமான QR-662 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

கைது செய்யப்பட்ட பொஸ்னிய பிரஜை மற்றும் கொக்கெய்ன் போதைப்பொருள் என்பன மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

97 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்னுடன் கட்டுநாயக்கவில் சிக்கிய வெளிநாட்டவர்.  97 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை தனது பயணப்பெட்டியில் மறைத்துக்கொண்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.66 வயதான பொஸ்னியா பிரஜை ஒருவர் இன்று (08) காலை விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் தனது பயணப் பெட்டிக்குள் கால்களை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் 114 பிரஷ்களுக்குள் 2 கிலோ 759 கிராம் கொக்கெய்னை மிக நுணுக்கமாக மறைத்து வைத்திருந்தார்.அவர் கொலம்பியாவிலிருந்து குறித்த போதைப்பொருளுடன் பயணிக்கத் தொடங்கி கட்டாரின் டோஹாவுக்கு வருகைதந்துள்ளார்.அங்கிருந்து இன்று அதிகாலை 02.40 மணியளவில் கட்டார் எயார்வேஸ் விமானமான QR-662 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.கைது செய்யப்பட்ட பொஸ்னிய பிரஜை மற்றும் கொக்கெய்ன் போதைப்பொருள் என்பன மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement