• Sep 17 2024

இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவர் திடீர் மரணம்..! நடந்தது என்ன?

Chithra / Aug 8th 2024, 7:34 am
image

Advertisement

 

பெந்தோட்டை நோக்கி வானில் பயணித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

ஓமான் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணியான 35 வயதுடைய ஐம் அலீம் சப்ரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியாவில் இருந்து ஹட்டன் ஊடாக பெந்தோட்டை நோக்கி தனியார் வான் ஒன்றில் பயணித்த சுற்றுலா பயணி திடீர் சுகவீனம் காரணமாக கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது வெளிநாட்டவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போதே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவர் திடீர் மரணம். நடந்தது என்ன  பெந்தோட்டை நோக்கி வானில் பயணித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.ஓமான் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணியான 35 வயதுடைய ஐம் அலீம் சப்ரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நுவரெலியாவில் இருந்து ஹட்டன் ஊடாக பெந்தோட்டை நோக்கி தனியார் வான் ஒன்றில் பயணித்த சுற்றுலா பயணி திடீர் சுகவீனம் காரணமாக கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதன்போது வெளிநாட்டவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போதே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.இதற்கமைய, ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement