அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து கட்டுநாயக்கவிற்கு வந்து மீண்டும் அமெரிக்கா நோக்கி சென்ற விமானத்தின் அவசர கதவை திறக்க முயற்சித்த வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய குறித்த வெளிநாட்டவரை விமான பணியாளர்கள் கட்டுப்படுத்தி வைத்துள்ளனர்.
குறித்த வெளிநாட்டவர் குடிபோதையில் இவ்வாறு செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 29 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து விமானத்தின் சீட் பெல்ட்களை பயன்படுத்தி இலங்கைக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர் கொழும்பு அளுத்கடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
குறித்த வெளிநாட்டவர் குற்றத்தை ஏற்றுக்கொண்ட நிலையில் 25000 ரூபா அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையிலிருந்து சென்ற விமானத்தில் அவசர கதவை திறக்க முயற்சித்த வெளிநாட்டவரால் பதற்றம் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து கட்டுநாயக்கவிற்கு வந்து மீண்டும் அமெரிக்கா நோக்கி சென்ற விமானத்தின் அவசர கதவை திறக்க முயற்சித்த வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய குறித்த வெளிநாட்டவரை விமான பணியாளர்கள் கட்டுப்படுத்தி வைத்துள்ளனர்.குறித்த வெளிநாட்டவர் குடிபோதையில் இவ்வாறு செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த 29 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து விமானத்தின் சீட் பெல்ட்களை பயன்படுத்தி இலங்கைக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர் கொழும்பு அளுத்கடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.குறித்த வெளிநாட்டவர் குற்றத்தை ஏற்றுக்கொண்ட நிலையில் 25000 ரூபா அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், விடுதலை செய்யப்பட்டுள்ளார்.