வடமராட்சி கற்கோவளம் கடற்கரை பிரதேசத்திற்கு இன்று (9) காலை முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது, கற்கோவளம் மீன் சந்தையை பார்வையிட்டதுடன் அப்பகுதி மீனவர்களின் தேவைப்பாடுகளையும் முன்னாள் அமைச்சர் கேட்டறிந்தார்.
அத்துடன் கற்கோவளம் கிராமத்திற்கு ஈ.பி.டி.பி கட்சி முன்பு ஆற்றிய சேவைகளை நினைவுபடுத்திய டக்ளஸ் தேவானந்தா, எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்கள் ஈ.பி.டி.பி கட்சியை ஆதரிப்பதற்கான தேவைப்பாடுகளையும் மக்களிடத்தில் முன்வைத்தார்.
கடற்கரைக்கும் மீன் சந்தைக்கும் இடையில் காணப்படும் பாலத்தை உரியமுறையில் புனரமைப்பு செய்யவேண்டிய தேவைப்படாடு காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் இந்த சந்திப்பின் போது முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வலியுறுத்தினர்.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் வடமராட்சி கற்கோவளத்திற்கு விஜயம். வடமராட்சி கற்கோவளம் கடற்கரை பிரதேசத்திற்கு இன்று (9) காலை முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் மேற்கொண்டார்.இதன்போது, கற்கோவளம் மீன் சந்தையை பார்வையிட்டதுடன் அப்பகுதி மீனவர்களின் தேவைப்பாடுகளையும் முன்னாள் அமைச்சர் கேட்டறிந்தார்.அத்துடன் கற்கோவளம் கிராமத்திற்கு ஈ.பி.டி.பி கட்சி முன்பு ஆற்றிய சேவைகளை நினைவுபடுத்திய டக்ளஸ் தேவானந்தா, எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்கள் ஈ.பி.டி.பி கட்சியை ஆதரிப்பதற்கான தேவைப்பாடுகளையும் மக்களிடத்தில் முன்வைத்தார்.கடற்கரைக்கும் மீன் சந்தைக்கும் இடையில் காணப்படும் பாலத்தை உரியமுறையில் புனரமைப்பு செய்யவேண்டிய தேவைப்படாடு காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் இந்த சந்திப்பின் போது முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வலியுறுத்தினர்.