முன்னாள் சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கொழும்பில் உள்ள பிரபல கிளப் ஒன்றில் வன்முறையாக நடந்து கொள்வதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அதனையடுத்து, முன்னாள் அமைச்சருக்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்கள், அவரை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
சம்பவ இடத்திலிருந்து வெளியேறும்போது ஹரின் கத்திக் கூச்சலிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சம்பவ இடத்திலிருந்தவர்கள் தெரிவித்தனர்.
அவரது குறித்த செயற்பாட்டால் கிளப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு எதுவும் செய்யப்படவில்லை என கறுவாத்தோட்டப் பொலிஸார் தெரிவித்தனர்.
சமூக ஊடக தரங்களுக்கு இணங்குவதற்காக வீடியோவிலுள்ள அனைத்து தகாத வார்த்தைப் பிரயோகங்களும் அகற்றப்பட்டுள்ளன.
பிரபல 'கிளப்'பில் அட்டகாசம் செய்த முன்னாள் அமைச்சர் ஹரின் முன்னாள் சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கொழும்பில் உள்ள பிரபல கிளப் ஒன்றில் வன்முறையாக நடந்து கொள்வதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.அதனையடுத்து, முன்னாள் அமைச்சருக்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்கள், அவரை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.சம்பவ இடத்திலிருந்து வெளியேறும்போது ஹரின் கத்திக் கூச்சலிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சம்பவ இடத்திலிருந்தவர்கள் தெரிவித்தனர். அவரது குறித்த செயற்பாட்டால் கிளப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு எதுவும் செய்யப்படவில்லை என கறுவாத்தோட்டப் பொலிஸார் தெரிவித்தனர். சமூக ஊடக தரங்களுக்கு இணங்குவதற்காக வீடியோவிலுள்ள அனைத்து தகாத வார்த்தைப் பிரயோகங்களும் அகற்றப்பட்டுள்ளன.