• Jan 13 2025

முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு..!

Sharmi / Jan 1st 2025, 4:45 pm
image

கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் தியாகாராஜா மகேஷ்வரனின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம்(01) வட்டுக்கோட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந் நினைவேந்தல் நிகழ்வு ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர் விஜிமருதன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பூஜை வழிபாட்டு இடம்பெற்றதுடன், அதனையடுத்து ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வட்டுக்கோட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் விஜிமருதன், மதகுருமார்கள், கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு. கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் தியாகாராஜா மகேஷ்வரனின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம்(01) வட்டுக்கோட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.இந் நினைவேந்தல் நிகழ்வு ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர் விஜிமருதன் தலைமையில் இடம்பெற்றது.இதன்போது பூஜை வழிபாட்டு இடம்பெற்றதுடன், அதனையடுத்து ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் வட்டுக்கோட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் விஜிமருதன், மதகுருமார்கள், கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement