விவசாயிகளுக்கு இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் பாதிப்புக்காக வழங்கப்பட்ட 40,000 ரூபா இழப்பீட்டுத் தொகையை ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கு எமது அரசாங்கத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. அதனை நடைமுறைப்படுத்த தற்போதைய அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
பொலன்னறுவையில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்தார்.
விவசாயிகள் இந்த அரசாங்கத்தில் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
2018ஆம் ஆண்டு நான் விவசாய அமைச்சராக பதவியேற்றபோது வழங்கப்பட்ட 40,000 ரூபா கொடுப்பனவே தற்போதும் வழங்கப்படுகிறது.
இது தற்போதைய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம் என செய்தியும் வெளியிடப்பட்டது.
இந்த அரசாங்கத்துக்கு உர மானியத்தைக் கூட வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
எமது அரசாங்கத்தில் உர மானியம் 15,000 ரூபாவிலிருந்து 25,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டது என தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் மஹிந்த கோரிக்கை விவசாயிகளுக்கு இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் பாதிப்புக்காக வழங்கப்பட்ட 40,000 ரூபா இழப்பீட்டுத் தொகையை ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கு எமது அரசாங்கத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. அதனை நடைமுறைப்படுத்த தற்போதைய அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.பொலன்னறுவையில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்தார்.விவசாயிகள் இந்த அரசாங்கத்தில் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.2018ஆம் ஆண்டு நான் விவசாய அமைச்சராக பதவியேற்றபோது வழங்கப்பட்ட 40,000 ரூபா கொடுப்பனவே தற்போதும் வழங்கப்படுகிறது. இது தற்போதைய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம் என செய்தியும் வெளியிடப்பட்டது.இந்த அரசாங்கத்துக்கு உர மானியத்தைக் கூட வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எமது அரசாங்கத்தில் உர மானியம் 15,000 ரூபாவிலிருந்து 25,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டது என தெரிவித்தார்.