அரசியிலிலிருந்து தான் ஓய்வு பெற்றுக்கொள்ளத் தயார் என முன்னாள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்வது தொடர்பில் எவ்வித தயக்கமும் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.
தனது 35 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் தம்மோடு பயணிப்பவர்கள் தொடர்பிலான பொறுப்பு தமக்கு உண்டு.
மேலும், அரசியல் சகாக்கள் மற்றும் மக்களை கைவிடுவது சிரமமான தீர்மானம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பதவி விலகுவதில் எவ்வித தயக்கமும் இல்லாத போதிலும் மக்களை கைவிட விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் எதிர்வரும் தேர்தலில் தாம் போட்டியிட வேண்டுமென பலர் விரும்புவதாகவும் நிமால் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியலிலிருந்து ஓய்வு பெறத் தயாராகும் முன்னாள் அமைச்சர் நிமால் அரசியிலிலிருந்து தான் ஓய்வு பெற்றுக்கொள்ளத் தயார் என முன்னாள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்வது தொடர்பில் எவ்வித தயக்கமும் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.தனது 35 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் தம்மோடு பயணிப்பவர்கள் தொடர்பிலான பொறுப்பு தமக்கு உண்டு.மேலும், அரசியல் சகாக்கள் மற்றும் மக்களை கைவிடுவது சிரமமான தீர்மானம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பதவி விலகுவதில் எவ்வித தயக்கமும் இல்லாத போதிலும் மக்களை கைவிட விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.அத்தோடு, பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் எதிர்வரும் தேர்தலில் தாம் போட்டியிட வேண்டுமென பலர் விரும்புவதாகவும் நிமால் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.