வெலிகந்த பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு வெலிகந்த பொலிஸார் 20 பசுக்களுடன் இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெரியவருகையில்,
“சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் வெலிகந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக அநாமதேய மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, நீதவான் இந்த விடயத்தை நேரில் விசாரித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது
அதன்படி, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் வடமத்திய மாகாண மூத்த பொலிஸ் கண்காணிப்பாளரிடம் நீதவான் ஒப்படைத்துள்ளார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கடந்த 18 ஆம் திகதி பொலிஸாரால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வழக்கின் முக்கிய சந்தேக நபரான வெலிகந்த முன்னாள் பொலிஸ் அதிகாரி தலைமறைவாக இருப்பதாக, வடமத்திய மாகாண மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர், (SSP) நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கின் முக்கிய சந்தேகநபருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பொலன்னறுவை நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
வெலிகந்த பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரியை கைது செய்ய உத்தரவு வெலிகந்த பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.சில மாதங்களுக்கு முன்பு வெலிகந்த பொலிஸார் 20 பசுக்களுடன் இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் தெரியவருகையில், “சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் வெலிகந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக அநாமதேய மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, நீதவான் இந்த விடயத்தை நேரில் விசாரித்ததாகத் தெரிவிக்கப்படுகிறதுஅதன்படி, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் வடமத்திய மாகாண மூத்த பொலிஸ் கண்காணிப்பாளரிடம் நீதவான் ஒப்படைத்துள்ளார்.இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கடந்த 18 ஆம் திகதி பொலிஸாரால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.வழக்கின் முக்கிய சந்தேக நபரான வெலிகந்த முன்னாள் பொலிஸ் அதிகாரி தலைமறைவாக இருப்பதாக, வடமத்திய மாகாண மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர், (SSP) நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.இந்நிலையில், இந்த வழக்கின் முக்கிய சந்தேகநபருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பொலன்னறுவை நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.