• May 11 2026

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் நாட்டுக்கு பயணம்

Chithra / Nov 21st 2025, 9:57 am
image


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக  சென்னை நோக்கிப் புறப்பட்டுள்ளார். 

ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்கவும் இந்தப் பயணத்தில் அவருடன் இணைந்து கொண்டுள்ளார். 

அவர்கள் இன்று காலை 8.40 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-121 இல் இந்தியாவின் சென்னை நகரை நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காகவே அவர் இந்தியாவின் தமிழ்நாட்டுக்கு புறப்பட்டுள்ளார். 

இதன் காரணமாக இன்று கூட்டு எதிர்க்கட்சிகளால் நுகேகொடையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்க மாட்டார்.

எவ்வாறிருப்பினும் பேரணி வெற்றிகரமாக இடம்பெறுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் தனது ஆசிகளையும், வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினரின் திருமணத்தில் மேலும் பல முக்கிய இலங்கை அரசியல் பிரமுகர்களுடன், இந்திய அரசியல் முக்கியஸ்தர்களும் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழ் நாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சில முக்கிய இரகசிய சந்திப்புக்களில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் நாட்டுக்கு பயணம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக  சென்னை நோக்கிப் புறப்பட்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்கவும் இந்தப் பயணத்தில் அவருடன் இணைந்து கொண்டுள்ளார். அவர்கள் இன்று காலை 8.40 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-121 இல் இந்தியாவின் சென்னை நகரை நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காகவே அவர் இந்தியாவின் தமிழ்நாட்டுக்கு புறப்பட்டுள்ளார். இதன் காரணமாக இன்று கூட்டு எதிர்க்கட்சிகளால் நுகேகொடையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்க மாட்டார்.எவ்வாறிருப்பினும் பேரணி வெற்றிகரமாக இடம்பெறுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் தனது ஆசிகளையும், வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற உறுப்பினரின் திருமணத்தில் மேலும் பல முக்கிய இலங்கை அரசியல் பிரமுகர்களுடன், இந்திய அரசியல் முக்கியஸ்தர்களும் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை தமிழ் நாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சில முக்கிய இரகசிய சந்திப்புக்களில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

Advertisement

Advertisement