• Sep 20 2024

பேருந்தும் கொள்கலனும் நேருக்கு நேர் மோதியதில் நால்வர் கவலைக்கிடம்...! 22 பேர் காயம் samugammedia

Chithra / Oct 6th 2023, 9:15 am
image

Advertisement


பேருந்து ஒன்றும் கொள்கலனும் நேருக்கு நேர் மோதியதில் இன்று (06) மற்றுமொரு விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பு பிரதான வீதியில் கஜுகம பிரதேசத்தில் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தும் கொழும்பில் இருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த கொள்கலனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்து இடம்பெற்ற அதேநேரம் பேரூந்தின் பின்னால் வந்த எரிபொருள் பவுசரும் பேருந்துடன் மோதியது.

விபத்தில் காயமடைந்த 22 பேரில் இருவர் வட்டுபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 04 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்களை பேருந்தில் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கஜுகம பிரதேசவாசிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

பேருந்தும் கொள்கலனும் நேருக்கு நேர் மோதியதில் நால்வர் கவலைக்கிடம். 22 பேர் காயம் samugammedia பேருந்து ஒன்றும் கொள்கலனும் நேருக்கு நேர் மோதியதில் இன்று (06) மற்றுமொரு விபத்து இடம்பெற்றுள்ளது.கொழும்பு பிரதான வீதியில் கஜுகம பிரதேசத்தில் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தும் கொழும்பில் இருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த கொள்கலனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.விபத்து இடம்பெற்ற அதேநேரம் பேரூந்தின் பின்னால் வந்த எரிபொருள் பவுசரும் பேருந்துடன் மோதியது.விபத்தில் காயமடைந்த 22 பேரில் இருவர் வட்டுபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 04 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.காயமடைந்தவர்களை பேருந்தில் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கஜுகம பிரதேசவாசிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement