• May 31 2026

மூன்று சிறுவர்கள் உட்பட நால்வர் நீரில் மூழ்கிப் பலி - விடுமுறையில் விபரீதம்

Chithra / May 31st 2026, 12:19 pm
image

ஹங்கம, களமெட்டிய கடற்பகுதியில் நீராடச் சென்ற போது அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மூன்று பாடசாலை மாணவர்களும் இன்று (31) காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.


நேற்று (30) சனிக்கிழமை மாலை இந்த துரதிர்ஷ்டவசமான  சம்பவம் இடம்பெற்றிருந்தது.


பொலிஸாரின் தகவல்களின்படி, உயிரிழந்த மூன்று மாணவர்களும் ஹுங்கம பிரதேசத்தைச் சேர்ந்த 12, 17 மற்றும் 18 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


வார இறுதி விடுமுறையைக் கழிப்பதற்காக மாணவர்கள் குழுவாகக் களமெட்டிய கடற்கரைக்குச் சென்று கடலில் நீராடியுள்ளனர்.


இதன்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கடுமையான கடல் அலை காரணமாக இந்த மூன்று மாணவர்களும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்தனர்.


இதனைத் தொடர்ந்து பிரதேச கடற்றொழிலாளர்கள், பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று மாலை முதல் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.


எனினும், இன்று (31) காலையிலேயே மூவரின் சடலங்களும் கடற்கரையோரமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


சடலங்கள் தற்போது உடற்கூறாய்வுப் பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹங்கம பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அதேநேரம், அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரூபஸ் குளத்தில் நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


உயிரிழந்தவர் திருக்கோவில் 03 பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

 

உயிரிழந்த நபர் குளத்தின் ஊடாக எருமைகளை ஓட்டிச் சென்ற போதே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 


அத்துடன்,  பாணந்துறை கடற்கரையில் நீராடச் சென்ற நபர் ஒருவர், நீரோட்டத்தில் சிக்குண்டு கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட போது, கடற்கரையில் உயிர்காப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாணந்துறை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் அவரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.


இவ்வாறு மீட்கப்பட்ட நபர் கிரியெல்ல பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.  

உயிர்காப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளால் மீட்கப்பட்டு கடற்கரைக்குக் கொண்டு வந்து அங்கு அவருக்கு அடிப்படை முதலுதவி வழங்கப்பட்டதன் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில் விடுமுறை நாட்களில் வீதி விபத்துகள் மற்றும் நீரில் மூழ்கும் சம்பவங்கள் கணிசமாக அதிகரிப்பதற்கான ஏதுக்கள் உள்ளதாகச் சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் தலைவர், சமூக மருத்துவ நிபுணர் சமில சிறிதுங்க ஏற்கனவே எச்சரித்திருந்தார்.


கடந்த காலத் தரவுகளை ஆய்வு செய்ததில், இத்தகைய நீண்ட விடுமுறை நாட்களில் பொதுமக்கள் அலட்சியமாகச் செயல்படுவதால் விபத்துகள் அதிகரிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. விசேடமாக இந்த வெசாக் பண்டிகை விடுமுறையிலும் இத்தகைய ஆபத்துகள் நேரிடலாம் என அவர் எதிர்வுகூறியிருந்தார்.


சில நீர்நிலைகளில் மற்றும் கடற்பகுதிகளில் மேலோட்டமாகப் பார்க்கும் போது அமைதியாகத் தெரிந்தாலும், திடீர் நீரோட்டம் அல்லது நீர் மட்டம் சட்டென அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. போதிய விழிப்புணர்வு இன்றி நீர்நிலைகளில் இறங்குவதால் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படுகிறது.


யாரேனும் நீரில் மூழ்கினால், உரிய மீட்புப் பயிற்சி இல்லாதவர்கள் உணர்ச்சிவசப்பட்டு அவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்து, தங்களது உயிரையும் ஆபத்தில் சிக்க வைக்க வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

மூன்று சிறுவர்கள் உட்பட நால்வர் நீரில் மூழ்கிப் பலி - விடுமுறையில் விபரீதம் ஹங்கம, களமெட்டிய கடற்பகுதியில் நீராடச் சென்ற போது அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மூன்று பாடசாலை மாணவர்களும் இன்று (31) காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.நேற்று (30) சனிக்கிழமை மாலை இந்த துரதிர்ஷ்டவசமான  சம்பவம் இடம்பெற்றிருந்தது.பொலிஸாரின் தகவல்களின்படி, உயிரிழந்த மூன்று மாணவர்களும் ஹுங்கம பிரதேசத்தைச் சேர்ந்த 12, 17 மற்றும் 18 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.வார இறுதி விடுமுறையைக் கழிப்பதற்காக மாணவர்கள் குழுவாகக் களமெட்டிய கடற்கரைக்குச் சென்று கடலில் நீராடியுள்ளனர்.இதன்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கடுமையான கடல் அலை காரணமாக இந்த மூன்று மாணவர்களும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்தனர்.இதனைத் தொடர்ந்து பிரதேச கடற்றொழிலாளர்கள், பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று மாலை முதல் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.எனினும், இன்று (31) காலையிலேயே மூவரின் சடலங்களும் கடற்கரையோரமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன.சடலங்கள் தற்போது உடற்கூறாய்வுப் பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹங்கம பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அதேநேரம், அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரூபஸ் குளத்தில் நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் திருக்கோவில் 03 பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. உயிரிழந்த நபர் குளத்தின் ஊடாக எருமைகளை ஓட்டிச் சென்ற போதே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அத்துடன்,  பாணந்துறை கடற்கரையில் நீராடச் சென்ற நபர் ஒருவர், நீரோட்டத்தில் சிக்குண்டு கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட போது, கடற்கரையில் உயிர்காப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாணந்துறை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் அவரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.இவ்வாறு மீட்கப்பட்ட நபர் கிரியெல்ல பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.  உயிர்காப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளால் மீட்கப்பட்டு கடற்கரைக்குக் கொண்டு வந்து அங்கு அவருக்கு அடிப்படை முதலுதவி வழங்கப்பட்டதன் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் விடுமுறை நாட்களில் வீதி விபத்துகள் மற்றும் நீரில் மூழ்கும் சம்பவங்கள் கணிசமாக அதிகரிப்பதற்கான ஏதுக்கள் உள்ளதாகச் சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் தலைவர், சமூக மருத்துவ நிபுணர் சமில சிறிதுங்க ஏற்கனவே எச்சரித்திருந்தார்.கடந்த காலத் தரவுகளை ஆய்வு செய்ததில், இத்தகைய நீண்ட விடுமுறை நாட்களில் பொதுமக்கள் அலட்சியமாகச் செயல்படுவதால் விபத்துகள் அதிகரிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. விசேடமாக இந்த வெசாக் பண்டிகை விடுமுறையிலும் இத்தகைய ஆபத்துகள் நேரிடலாம் என அவர் எதிர்வுகூறியிருந்தார்.சில நீர்நிலைகளில் மற்றும் கடற்பகுதிகளில் மேலோட்டமாகப் பார்க்கும் போது அமைதியாகத் தெரிந்தாலும், திடீர் நீரோட்டம் அல்லது நீர் மட்டம் சட்டென அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. போதிய விழிப்புணர்வு இன்றி நீர்நிலைகளில் இறங்குவதால் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படுகிறது.யாரேனும் நீரில் மூழ்கினால், உரிய மீட்புப் பயிற்சி இல்லாதவர்கள் உணர்ச்சிவசப்பட்டு அவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்து, தங்களது உயிரையும் ஆபத்தில் சிக்க வைக்க வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement