• Jul 01 2026

இறைவரித் திணைக்கள அதிகாரி என்ற பெயரில் லட்சக்கணக்கில் மோசடி – சந்தேகநபர் கைது

Chithra / Jun 30th 2026, 11:22 am
image


தன்னை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உயர் அதிகாரி எனப் போலியாக அறிமுகப்படுத்தி, வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களிடம் பெரிய தொகைப் பணத்தை மோசடி செய்து வந்த நபர் ஒருவரைக் கொம்பனித்தெரு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் எனப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.


சந்தேக நபர் தன்னை ஒரு வருமான வரி அதிகாரி எனக் கூறி, வரிக் குறைப்புச் செய்து தருவதாகவும், திணைக்கள ரீதியான சிக்கல்களைத் தீர்த்து வைப்பதாகவும் கூறி பல்வேறு நபர்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்துள்ளார்.


இவரால் ஏமாற்றப்பட்ட பாதிக்கப்பட்ட நபர்கள் சிலர் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறையிட்டனர்.


இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த கொம்பனித்தெரு பொலிஸ் குழுவினர், திட்டமிட்டு வலைவீசி சந்தேக நபரைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.


கைது செய்யப்பட்டுள்ள இந்த 50 வயது நபர், இதேபோன்று அரசாங்க உயர் அதிகாரி எனப் போலி அடையாளத்தைக் காட்டி பண மோசடிகளில் ஈடுபட்டமைக்காக, இதற்கு முன்னரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுப் பிணையில் வந்தவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சந்தேக நபரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கொம்பனித்தெரு பொலிஸார் மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இறைவரித் திணைக்கள அதிகாரிகள் என்ற பெயரில் எவராவது உங்களிடம் வந்து வரிச் சலுகைகள் பெற்றுத் தருவதாகக் கூறிப் பணம் கோரினால், உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தெரியப்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


இறைவரித் திணைக்கள அதிகாரி என்ற பெயரில் லட்சக்கணக்கில் மோசடி – சந்தேகநபர் கைது தன்னை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உயர் அதிகாரி எனப் போலியாக அறிமுகப்படுத்தி, வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களிடம் பெரிய தொகைப் பணத்தை மோசடி செய்து வந்த நபர் ஒருவரைக் கொம்பனித்தெரு பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் எனப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.சந்தேக நபர் தன்னை ஒரு வருமான வரி அதிகாரி எனக் கூறி, வரிக் குறைப்புச் செய்து தருவதாகவும், திணைக்கள ரீதியான சிக்கல்களைத் தீர்த்து வைப்பதாகவும் கூறி பல்வேறு நபர்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்துள்ளார்.இவரால் ஏமாற்றப்பட்ட பாதிக்கப்பட்ட நபர்கள் சிலர் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறையிட்டனர்.இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த கொம்பனித்தெரு பொலிஸ் குழுவினர், திட்டமிட்டு வலைவீசி சந்தேக நபரைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.கைது செய்யப்பட்டுள்ள இந்த 50 வயது நபர், இதேபோன்று அரசாங்க உயர் அதிகாரி எனப் போலி அடையாளத்தைக் காட்டி பண மோசடிகளில் ஈடுபட்டமைக்காக, இதற்கு முன்னரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுப் பிணையில் வந்தவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சந்தேக நபரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கொம்பனித்தெரு பொலிஸார் மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இறைவரித் திணைக்கள அதிகாரிகள் என்ற பெயரில் எவராவது உங்களிடம் வந்து வரிச் சலுகைகள் பெற்றுத் தருவதாகக் கூறிப் பணம் கோரினால், உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தெரியப்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement