• Nov 22 2024

இலங்கையில் பலரை கொலை செய்ய பிரான்ஸில் திட்டம் - பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

Chithra / Jul 11th 2024, 10:08 am
image

 

பிரான்ஸில் பதுங்கியிருக்கும் பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிப்பானை இம்ரான் மற்றும் டுபாயில் பதுங்கியிருக்கும் லொக்கு பெட்டி ஆகியோரின் கொலை திட்டம் தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.

பிரபல பாடகர், நடிகர் உட்பட 07 பேரை கொலை செய்வதற்கு காஞ்சிபனியும் லொகு பெட்டியும் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலில் தெரியவந்துள்ளது.

இந்த 7 பேர் பாதாள உலகக் குழு உறுப்பினர்களிடம் இருந்து லட்சக்கணக்கான பணத்தை பெற்றுக் கொண்டதாகவும், 

அதனைத் திருப்பிக் கொடுக்காமையினால் கொலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக இந்த பாடகர் மற்றும் அவரது குழுவினர் பாதாள உலக உறுப்பினர்கள் பதுங்கியிருக்கும் நாடுகளுக்கு சென்று வைபவம் ஒன்றில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் படுகொலை திட்டத்தின் உண்மை தன்மை தொடர்பில் விசாரிப்பதற்கு பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் பலரை கொலை செய்ய பிரான்ஸில் திட்டம் - பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்  பிரான்ஸில் பதுங்கியிருக்கும் பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிப்பானை இம்ரான் மற்றும் டுபாயில் பதுங்கியிருக்கும் லொக்கு பெட்டி ஆகியோரின் கொலை திட்டம் தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.பிரபல பாடகர், நடிகர் உட்பட 07 பேரை கொலை செய்வதற்கு காஞ்சிபனியும் லொகு பெட்டியும் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலில் தெரியவந்துள்ளது.இந்த 7 பேர் பாதாள உலகக் குழு உறுப்பினர்களிடம் இருந்து லட்சக்கணக்கான பணத்தை பெற்றுக் கொண்டதாகவும், அதனைத் திருப்பிக் கொடுக்காமையினால் கொலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.முன்னதாக இந்த பாடகர் மற்றும் அவரது குழுவினர் பாதாள உலக உறுப்பினர்கள் பதுங்கியிருக்கும் நாடுகளுக்கு சென்று வைபவம் ஒன்றில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்தப் படுகொலை திட்டத்தின் உண்மை தன்மை தொடர்பில் விசாரிப்பதற்கு பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement