யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடப் பழைய மாணவர் சங்கம் பெருமையுடன் முன்னெடுக்கும் "வேரிலிருந்து விழுது வரை" ஒன்றிணையும் பொன் விழா சங்கமத்தை முன்னிட்டு நடைபவனி இன்றையதினம் நடைபெற்றது .
உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேரணி மற்றும் நடைபவனி மேற்கொள்வதற்கு தடை விதித்தே யாழ்ப்பாண பல்கலைக்கழக நுழைவாயிலில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர் .
இதன்போது ஏற்பாட்டாளர்கள் இது தேர்தல் சார்ந்த நடைபவனி அல்ல என பொலிஸாருக்கு தெளிவுபடுத்திய நிலையில் வேட்பாளர்களாக போட்டியிடுபவர்கள் நடைபவனியில் பங்கேற்க முடியாது என்ற நிபந்தனையுடன் இவ் நடைபவனி இடம்பெற்றது.
இவ் நடைபவனியில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா, பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடப் பழைய மாணவர் சங்க நிர்வாகிகள், பல்கலைக்கழக பழைய மாணவர்கள், மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்
“வேரிலிருந்து விழுது வரை”யாழ்.பல்கலை பழைய மாணவர்களின் சங்கமம் - தடையின் பின் நடந்த பவனி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடப் பழைய மாணவர் சங்கம் பெருமையுடன் முன்னெடுக்கும் "வேரிலிருந்து விழுது வரை" ஒன்றிணையும் பொன் விழா சங்கமத்தை முன்னிட்டு நடைபவனி இன்றையதினம் நடைபெற்றது .உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேரணி மற்றும் நடைபவனி மேற்கொள்வதற்கு தடை விதித்தே யாழ்ப்பாண பல்கலைக்கழக நுழைவாயிலில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர் .இதன்போது ஏற்பாட்டாளர்கள் இது தேர்தல் சார்ந்த நடைபவனி அல்ல என பொலிஸாருக்கு தெளிவுபடுத்திய நிலையில் வேட்பாளர்களாக போட்டியிடுபவர்கள் நடைபவனியில் பங்கேற்க முடியாது என்ற நிபந்தனையுடன் இவ் நடைபவனி இடம்பெற்றது.இவ் நடைபவனியில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா, பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடப் பழைய மாணவர் சங்க நிர்வாகிகள், பல்கலைக்கழக பழைய மாணவர்கள், மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்