• Aug 24 2026

செப்டம்பர் 5 முதல் ஜனாதிபதி தலைமையில் மாவட்ட ரீதியான மக்கள் பேரணிகள் – அமைச்சர் நலிந்த அறிவிப்பு

Chithra / Aug 23rd 2026, 10:43 am
image


ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் திகதி முதல் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் விசேட மக்கள் பேரணித் தொடர் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


இதற்கு இணையாக, கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் கோட்டச் சபைகளை மீளமைக்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


களுத்துறை பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.


இதன்போது கருத்து தெரிவித்த அவர், முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினருக்கு அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் ஆதரவு இருப்பதாகக் கருதினால், மக்களை ஒன்றுதிரட்டி வீதியில் இறங்கி மக்கள் பேரணிகளை நடத்தி அதனை நிரூபிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


வார்த்தைகளால் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதில் பயனில்லை எனவும், மக்கள் ஆதரவு இருப்பதை செயற்பாட்டின் மூலம் வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


தேசிய மக்கள் சக்தி கிராம மட்டத்திலும், கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்திலும் கோட்டச் சபைகளை மீளமைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.


அத்துடன், செப்டம்பர் 5ஆம் திகதி முதல் ஜனாதிபதி தலைமையில் மாவட்ட ரீதியாக பிரம்மாண்டமான மக்கள் பேரணிகள் நடத்தப்படவுள்ளதாகவும், அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் கருத்து நிலவுவதாக எதிர்க்கட்சியினர் கருதினால், அதனை மக்கள் மத்தியில் நிரூபித்துக் காட்டுமாறும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ சவால் விடுத்தார்.


செப்டம்பர் 5 முதல் ஜனாதிபதி தலைமையில் மாவட்ட ரீதியான மக்கள் பேரணிகள் – அமைச்சர் நலிந்த அறிவிப்பு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் திகதி முதல் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் விசேட மக்கள் பேரணித் தொடர் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.இதற்கு இணையாக, கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் கோட்டச் சபைகளை மீளமைக்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.களுத்துறை பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.இதன்போது கருத்து தெரிவித்த அவர், முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினருக்கு அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் ஆதரவு இருப்பதாகக் கருதினால், மக்களை ஒன்றுதிரட்டி வீதியில் இறங்கி மக்கள் பேரணிகளை நடத்தி அதனை நிரூபிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.வார்த்தைகளால் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதில் பயனில்லை எனவும், மக்கள் ஆதரவு இருப்பதை செயற்பாட்டின் மூலம் வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.தேசிய மக்கள் சக்தி கிராம மட்டத்திலும், கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்திலும் கோட்டச் சபைகளை மீளமைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.அத்துடன், செப்டம்பர் 5ஆம் திகதி முதல் ஜனாதிபதி தலைமையில் மாவட்ட ரீதியாக பிரம்மாண்டமான மக்கள் பேரணிகள் நடத்தப்படவுள்ளதாகவும், அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் கருத்து நிலவுவதாக எதிர்க்கட்சியினர் கருதினால், அதனை மக்கள் மத்தியில் நிரூபித்துக் காட்டுமாறும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ சவால் விடுத்தார்.

Advertisement

Advertisement

Advertisement