• Nov 28 2024

அடுத்த சில மாதங்களில் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

Chithra / Oct 6th 2024, 8:22 am
image

 

கடந்த எரிபொருள் விலை திருத்தமானது விலைச் சூத்திரத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்படவில்லை என  அமைச்சர் விஜித ஹேரத் பொய்யொன்றை கூறியதாக முன்னாள் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  காஞ்சன விஜேசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பெட்ரோலிய சட்டமூலக் கூட்டுத்தாபனத்தின் தலைவர், விலைச் சூத்திரத்தின் பிரகாரம் உரிய விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதனை உறுதிப்படுத்தியதாகவும் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

2022-2023ல் இல்லாத வகையில், நாட்டின் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளதால், போட்டி விலையில் சப்ளையர்களிடம் இருந்து எரிபொருளை பெறுவது தற்போது சாத்தியமாகியுள்ளது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் வரை எரிபொருள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் பலன்களின் அடிப்படையில் அடுத்த சில மாதங்களில் எண்ணெய் விலையை  15 முதல் 20 வீதம் வரை குறைக்கும் சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த சில மாதங்களில் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்  கடந்த எரிபொருள் விலை திருத்தமானது விலைச் சூத்திரத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்படவில்லை என  அமைச்சர் விஜித ஹேரத் பொய்யொன்றை கூறியதாக முன்னாள் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  காஞ்சன விஜேசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.இலங்கை பெட்ரோலிய சட்டமூலக் கூட்டுத்தாபனத்தின் தலைவர், விலைச் சூத்திரத்தின் பிரகாரம் உரிய விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதனை உறுதிப்படுத்தியதாகவும் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.2022-2023ல் இல்லாத வகையில், நாட்டின் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளதால், போட்டி விலையில் சப்ளையர்களிடம் இருந்து எரிபொருளை பெறுவது தற்போது சாத்தியமாகியுள்ளது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் வரை எரிபொருள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் பலன்களின் அடிப்படையில் அடுத்த சில மாதங்களில் எண்ணெய் விலையை  15 முதல் 20 வீதம் வரை குறைக்கும் சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement