அல்விஸ் அறிக்கையை ஏற்க முடியாது என்பதற்கு அரசாங்கம் குறிப்பிடும் காரணம் சிறுபிள்ளைத்தனமானது என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (23) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனை குறிப்பிட்டார்.
ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏ.என்.ஜே. டி அல்விஸ் அறிக்கையை சமர்ப்பித்த குழுவையும், தன்னையும் குற்றச்சாட்டுவதை விடுத்து, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மையா பொய்யா என்பது தொடர்பில் அமைச்சர் விஜித ஹேரத் விசாரணை நடத்த வேண்டும்
இந்த குழுவின் தலைவராக பதவி வகித்த நீதியரசர் அல்விஸ் 2006 முதல் 2023 வரையான காலப்பகுதியில் வழங்கிய தீர்ப்புக்களை இரத்து செய்ய முடியுமா? எனவும் உதய கம்மன்பில கேள்வியெழுப்பியுள்ளார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களை ரவி செனவிரத்ன 12 நாட்கள் மூடி மறைத்தது உண்மையா? பொய்யா? என அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.
அல்விஸ் அறிக்கையில் நிலந்த, பூஜித, தேசபந்து உட்பட 17 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ரவி செனவிரத்ன, சானி அபேசேகர ஆகியோரை மாத்திரம் பாதுகாக்க அரசாங்கம் ஏன் முயற்சிக்க வேண்டும் என்றும் உதய கம்மன்பில கேள்வியெழுப்பியுள்ளார்.
ரவி மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கம்மன்பில கோரிக்கை அல்விஸ் அறிக்கையை ஏற்க முடியாது என்பதற்கு அரசாங்கம் குறிப்பிடும் காரணம் சிறுபிள்ளைத்தனமானது என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று (23) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனை குறிப்பிட்டார்.ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏ.என்.ஜே. டி அல்விஸ் அறிக்கையை சமர்ப்பித்த குழுவையும், தன்னையும் குற்றச்சாட்டுவதை விடுத்து, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மையா பொய்யா என்பது தொடர்பில் அமைச்சர் விஜித ஹேரத் விசாரணை நடத்த வேண்டும் இந்த குழுவின் தலைவராக பதவி வகித்த நீதியரசர் அல்விஸ் 2006 முதல் 2023 வரையான காலப்பகுதியில் வழங்கிய தீர்ப்புக்களை இரத்து செய்ய முடியுமா எனவும் உதய கம்மன்பில கேள்வியெழுப்பியுள்ளார்.இதேவேளை, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களை ரவி செனவிரத்ன 12 நாட்கள் மூடி மறைத்தது உண்மையா பொய்யா என அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.அல்விஸ் அறிக்கையில் நிலந்த, பூஜித, தேசபந்து உட்பட 17 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ரவி செனவிரத்ன, சானி அபேசேகர ஆகியோரை மாத்திரம் பாதுகாக்க அரசாங்கம் ஏன் முயற்சிக்க வேண்டும் என்றும் உதய கம்மன்பில கேள்வியெழுப்பியுள்ளார்.