• Jan 24 2025

ஹம்பேகமுவவில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா தோட்டம் - ஒருவர் கைது!

Tamil nila / Dec 8th 2024, 7:46 pm
image

ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவில் உள்ள காட்டுப் பகுதியில் கஞ்சா தோட்டம் பராமரித்து வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி நபர் தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய குடும்பஸ்தர் ஆவார்.

ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இந்தக் கஞ்சா தோட்டத்தில் சுமார் 18  ஆயிரம் கஞ்சா செடிகள் 3 அடி உயரம் வரை வளர்ந்துள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.  

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஹம்பேகமுவவில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா தோட்டம் - ஒருவர் கைது ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவில் உள்ள காட்டுப் பகுதியில் கஞ்சா தோட்டம் பராமரித்து வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மேற்படி நபர் தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய குடும்பஸ்தர் ஆவார்.ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இந்தக் கஞ்சா தோட்டத்தில் சுமார் 18  ஆயிரம் கஞ்சா செடிகள் 3 அடி உயரம் வரை வளர்ந்துள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.இதையடுத்து சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement