• Nov 22 2024

யாழில் வீதியோரங்களில் கொட்டப்படும் கழிவுப் பொருட்கள்....! பயணிகள் விசனம்...!

Sharmi / May 14th 2024, 1:06 pm
image

யாழில் வீதியோரத்தில் கழிவுப் பொருட்கள் தீயிட்டு எரிக்கப்படுவதனால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர் நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தின் காக்கைதீவு மீன் சந்தையில் இருந்து சுமார் 150 மீற்றர்கள் தொலைவில் வீதியோரத்தில் கழிவுப் பொருட்கள் தீயிட்டு எரிக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக இனந்தெரியாத  நபர்கள்  இரவு வேளை  சனப் புழக்கமற்ற நேரத்தில் வைத்தியசாலை கழிவுகள்,வியாபார நிலையங்களின் கழிவுகள், வீட்டுக்கு கழிவுகள் உள்ளிட்ட பல கழிவுப் பொருட்களை வீதியோரங்களில் கொட்டிவிட்டுச் செல்லும் நிலைமை காணப்படுகின்றது.

இவ்வாறு வீதியோரங்களில் கொட்டப்படும்  கழிவுகளால் வீதியெங்கும் துர்நாற்றம் வீசுகின்றது.

இந்நிலையில் இன்றையதினம் யாழ்ப்பாண மாநகரசபை ஊழியர்கள் குறித்த கழிவுப் பொருட்களை அவ்விடத்தில் வைத்தே தீமூட்டியுள்ளனர். 

இதனால் வழி மாசடைந்ததுடன் வீதியால் செல்கின்ற பயணிகள் அசௌகரியங்களையும் எதிர்நோக்கியுள்ளனர்.

அத்துடன் புகைமண்டலம் வீதியில் பரவியதால் எதிரே வருகின்ற வாகனங்கள் தெரியாமல் வீதி விபத்து ஏற்படக்கூடிய அபாயகரமான சூழலும்  அங்கு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் வீதியோரங்களில் கொட்டப்படும் கழிவுப் பொருட்கள். பயணிகள் விசனம். யாழில் வீதியோரத்தில் கழிவுப் பொருட்கள் தீயிட்டு எரிக்கப்படுவதனால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர் நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணத்தின் காக்கைதீவு மீன் சந்தையில் இருந்து சுமார் 150 மீற்றர்கள் தொலைவில் வீதியோரத்தில் கழிவுப் பொருட்கள் தீயிட்டு எரிக்கப்பட்டு வருகின்றது.குறிப்பாக இனந்தெரியாத  நபர்கள்  இரவு வேளை  சனப் புழக்கமற்ற நேரத்தில் வைத்தியசாலை கழிவுகள்,வியாபார நிலையங்களின் கழிவுகள், வீட்டுக்கு கழிவுகள் உள்ளிட்ட பல கழிவுப் பொருட்களை வீதியோரங்களில் கொட்டிவிட்டுச் செல்லும் நிலைமை காணப்படுகின்றது.இவ்வாறு வீதியோரங்களில் கொட்டப்படும்  கழிவுகளால் வீதியெங்கும் துர்நாற்றம் வீசுகின்றது.இந்நிலையில் இன்றையதினம் யாழ்ப்பாண மாநகரசபை ஊழியர்கள் குறித்த கழிவுப் பொருட்களை அவ்விடத்தில் வைத்தே தீமூட்டியுள்ளனர். இதனால் வழி மாசடைந்ததுடன் வீதியால் செல்கின்ற பயணிகள் அசௌகரியங்களையும் எதிர்நோக்கியுள்ளனர்.அத்துடன் புகைமண்டலம் வீதியில் பரவியதால் எதிரே வருகின்ற வாகனங்கள் தெரியாமல் வீதி விபத்து ஏற்படக்கூடிய அபாயகரமான சூழலும்  அங்கு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement