• May 29 2026

கிரிஷ் பணமோசடி வழக்கு; நீதிமன்றம் அதிரடி உத்தரவு- சாட்சியளிக்க பயமில்லை -நாமல்

shanu / May 29th 2026, 7:23 pm
image

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' நிதி மோசடி தொடர்பான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 7ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


இன்று இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த புதிய திகதி அறிவிக்கப்பட்டது. 


இந்தியாவை தளமாகக் கொண்ட 'கிரிஷ் லங்கா' நிறுவனத்திடமிருந்து ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதாகக் கூறி, 70 மில்லியன் ரூபாவைப்  பெற்று  துஷ்பிரயோகம் செய்ததாக  நாமல் ராஜபக்ச மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 


கடந்த 2015ஆம் ஆண்டு நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விவகாரம் தொடர்பாக, சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 


முன்னதாக, இவ்வழக்கில் சந்தேகநபராகக் கைது செய்யப்பட்டிருந்த நாமல் ராஜபக்ச, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து மேல் நீதிமன்றத்தில் வழக்குப் பரிசீலனைகள் மற்றும் முன்திரையிடல் மாநாடுகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது சாட்சி விசாரணைகளுக்கான திகதி குறிக்கப்பட்டுள்ளது.


நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ச, தாம் சட்டத்திற்கு மதிப்பளித்து நீதிமன்றத்தில் முன்னிலையாகி, ஆரம்பகட்ட விசாரணைகளை எதிர்கொண்டு, அடுத்த வழக்குத் திகதியையும் பெற்றுக்கொண்டே வெளியே வந்துள்ளதாகக் குறிப்பிட்டார். 


எங்கு எப்போது தேவையோ, அங்கெல்லாம் தாம் முன்னிலையாகத் தயாராகவே இருப்பதாகவும் தாம் ஒருபோதும் ஒளிந்து வாழவில்லை என்றும் வலியுறுத்தினார்.

கிரிஷ் பணமோசடி வழக்கு; நீதிமன்றம் அதிரடி உத்தரவு- சாட்சியளிக்க பயமில்லை -நாமல் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' நிதி மோசடி தொடர்பான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 7ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த புதிய திகதி அறிவிக்கப்பட்டது. இந்தியாவை தளமாகக் கொண்ட 'கிரிஷ் லங்கா' நிறுவனத்திடமிருந்து ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதாகக் கூறி, 70 மில்லியன் ரூபாவைப்  பெற்று  துஷ்பிரயோகம் செய்ததாக  நாமல் ராஜபக்ச மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விவகாரம் தொடர்பாக, சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக, இவ்வழக்கில் சந்தேகநபராகக் கைது செய்யப்பட்டிருந்த நாமல் ராஜபக்ச, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து மேல் நீதிமன்றத்தில் வழக்குப் பரிசீலனைகள் மற்றும் முன்திரையிடல் மாநாடுகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது சாட்சி விசாரணைகளுக்கான திகதி குறிக்கப்பட்டுள்ளது.நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ச, தாம் சட்டத்திற்கு மதிப்பளித்து நீதிமன்றத்தில் முன்னிலையாகி, ஆரம்பகட்ட விசாரணைகளை எதிர்கொண்டு, அடுத்த வழக்குத் திகதியையும் பெற்றுக்கொண்டே வெளியே வந்துள்ளதாகக் குறிப்பிட்டார். எங்கு எப்போது தேவையோ, அங்கெல்லாம் தாம் முன்னிலையாகத் தயாராகவே இருப்பதாகவும் தாம் ஒருபோதும் ஒளிந்து வாழவில்லை என்றும் வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement