• Sep 10 2026

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம்; துமிந்தவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

Chithra / Sep 10th 2026, 12:12 pm
image

 

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட இருவருக்கு எதிராக இன்று (10) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் மற்றொரு பெண் ஆகிய இரு குற்றவாளிகளுக்கும் முறைப்படி குற்றப்பத்திரிகைகள் வழங்கப்பட்டுள்ளன.


குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட இரு சந்தேகநபர்களையும் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


இந்நிலையில், தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக வழக்கு நடவடிக்கைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன.

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம்; துமிந்தவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை  தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட இருவருக்கு எதிராக இன்று (10) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் மற்றொரு பெண் ஆகிய இரு குற்றவாளிகளுக்கும் முறைப்படி குற்றப்பத்திரிகைகள் வழங்கப்பட்டுள்ளன.குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட இரு சந்தேகநபர்களையும் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில், தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக வழக்கு நடவடிக்கைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement