ஜிமெயில் பயனர்களுக்கு கூகிள் நிறுவனம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை வழங்கியுள்ளது.
கூகிள் தங்களுடைய சர்வரில் இட வசதியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி 2 வருடங்களாக பயன்பாட்டில் இல்லாத ஜிமெயில் கணக்குகளை நிரந்தரமாக சர்வரில் இருந்து நீக்க முடிவெடுத்துள்ளது.
அவ்வாறு நீக்கி விட்டால் அதில் உள்ள ஆவணங்கள், டிரைவ், மீட், காலண்டர், கூகுள் போட்டோஸ் என அனைத்தும் மீண்டும் கிடைக்காது. இந்த பணியை செப்டம்பர் 20 ஆம் தேதியில் இருந்து தொடங்க உள்ளது.
இந்த நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கூகிள் சில வழிமுறைகளை அறிவித்துள்ளது.
வெகு நாட்களாக பயன்படுத்தாத ஜிமெயில் கணக்கை லாகின் செய்து ஒரு மின்னஞ்சலை படிப்பது அல்லது மின்னஞ்சல் அனுப்புவது என ஏதாவது ஒன்று செய்யும் போது உங்கள் ஜிமெயில் கணக்கு பயன்பாட்டில் உள்ளதாக கருதப்படும்.
மேலும் இதை செய்ய தவறினால் உங்கள் ஜிமெயில் கணக்கு பயன்பாட்டில் இல்லை என கருதி உங்கள் ஜிமெயில் கணக்கு நிரந்தமாக நீக்கப்படும். அதில் உள்ள தகவல்களை திரும்ப பெற முடியாது.
ஜிமெயில் பயனர்களுக்கு கூகிள் விடுத்த முக்கிய எச்சரிக்கை ஜிமெயில் பயனர்களுக்கு கூகிள் நிறுவனம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை வழங்கியுள்ளது.கூகிள் தங்களுடைய சர்வரில் இட வசதியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன்படி 2 வருடங்களாக பயன்பாட்டில் இல்லாத ஜிமெயில் கணக்குகளை நிரந்தரமாக சர்வரில் இருந்து நீக்க முடிவெடுத்துள்ளது. அவ்வாறு நீக்கி விட்டால் அதில் உள்ள ஆவணங்கள், டிரைவ், மீட், காலண்டர், கூகுள் போட்டோஸ் என அனைத்தும் மீண்டும் கிடைக்காது. இந்த பணியை செப்டம்பர் 20 ஆம் தேதியில் இருந்து தொடங்க உள்ளது.இந்த நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கூகிள் சில வழிமுறைகளை அறிவித்துள்ளது. வெகு நாட்களாக பயன்படுத்தாத ஜிமெயில் கணக்கை லாகின் செய்து ஒரு மின்னஞ்சலை படிப்பது அல்லது மின்னஞ்சல் அனுப்புவது என ஏதாவது ஒன்று செய்யும் போது உங்கள் ஜிமெயில் கணக்கு பயன்பாட்டில் உள்ளதாக கருதப்படும்.மேலும் இதை செய்ய தவறினால் உங்கள் ஜிமெயில் கணக்கு பயன்பாட்டில் இல்லை என கருதி உங்கள் ஜிமெயில் கணக்கு நிரந்தமாக நீக்கப்படும். அதில் உள்ள தகவல்களை திரும்ப பெற முடியாது.