• Sep 20 2024

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அரச பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்!

Tamil nila / Sep 11th 2024, 10:41 pm
image

Advertisement

யாழில் இருந்து அக்கறைப்பற்று நோக்கி புறப்பட்ட அரச பேருந்து இன்று பிற்பகல் வேளையில் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற வேளையில் குறித்த பேருந்தின் நடத்துனர் மீது வவுனியா - கொழும்பு பயணிக்கும் தனியார் பேருந்தின் சாரதி ஒருவர் தாக்குதலை மேற்கொண்டதில் அரச பேருந்தின் நடத்துனர் காயமடைந்த நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் 

இன்று பிற்பகல் 1.30 மணியளவில் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

இதேவேளை குறித்த சம்பவத்தினை தொடர்ந்து அதே தனியார் பேருந்தில் பணிபுரிந்த நபர் ஒருவர் வாளுடன் புதிய பேருந்து நிலையத்திற்கு வருகை தந்து அப்பகுதியில் இருந்த அரச பேருந்து ஊழியர்கள் மீது தாக்குதலை நடத்தியதில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக அரச பேருந்து ஊழியர்கள் தெரிவிக்கின்றனர் , இது தொடர்பாக பொலிஸ் முறைப்பாடும் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்

சம்பவம் தொடர்பான CCTV காணொளிகள் பேருந்து நிலையத்தில் காணப்படுவதுடன் இது தொடர்பான விசாரனைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்

குறித்த தனியார் பேருந்தானது கொழும்பிலிருந்து வவுனியா பயணிக்கும் பேருந்து என்பதுடன் வவுனியா மாவட்ட தனியார் பேருந்து சங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது


வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அரச பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் யாழில் இருந்து அக்கறைப்பற்று நோக்கி புறப்பட்ட அரச பேருந்து இன்று பிற்பகல் வேளையில் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற வேளையில் குறித்த பேருந்தின் நடத்துனர் மீது வவுனியா - கொழும்பு பயணிக்கும் தனியார் பேருந்தின் சாரதி ஒருவர் தாக்குதலை மேற்கொண்டதில் அரச பேருந்தின் நடத்துனர் காயமடைந்த நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவதுஇதேவேளை குறித்த சம்பவத்தினை தொடர்ந்து அதே தனியார் பேருந்தில் பணிபுரிந்த நபர் ஒருவர் வாளுடன் புதிய பேருந்து நிலையத்திற்கு வருகை தந்து அப்பகுதியில் இருந்த அரச பேருந்து ஊழியர்கள் மீது தாக்குதலை நடத்தியதில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக அரச பேருந்து ஊழியர்கள் தெரிவிக்கின்றனர் , இது தொடர்பாக பொலிஸ் முறைப்பாடும் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்சம்பவம் தொடர்பான CCTV காணொளிகள் பேருந்து நிலையத்தில் காணப்படுவதுடன் இது தொடர்பான விசாரனைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்குறித்த தனியார் பேருந்தானது கொழும்பிலிருந்து வவுனியா பயணிக்கும் பேருந்து என்பதுடன் வவுனியா மாவட்ட தனியார் பேருந்து சங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement