தற்போதைய அரசாங்கம் நாட்டின் ஜனநாயக முறைமையையும் எதிர்க்கட்சியையும் அடக்கும் செயற்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இன்று (06) இடம்பெற்ற நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் இடையூறுகளும் விதிக்கப்படுவதுடன், எவ்வித காரணமும் இன்றி அரசியல்வாதிகள் கைது செய்யப்படுவதாகவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுயாதீன தொழிற்சங்கங்களை அடக்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சட்டத்தரணிகள் சங்கம், வைத்தியர்கள் மற்றும் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு எதிராகவும் அரசாங்கம் தற்போது செயற்படத் தொடங்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை தமது கட்சி எதிர்த்ததற்கு, அதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து அரசாங்கம் குறிப்பிடாததே காரணம் எனவும் அவர் கூறியுள்ளார். இதன் சட்டபூர்வ தன்மையை உறுதிப்படுத்துவதற்காக நீதிமன்றத்தின் ஊடாக சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்கு உரிய முறையில் பேசுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ராஜீவ் அமரசூரியவை அழைத்திருந்த சந்தர்ப்பத்தில், அவரை பாராளுமன்றத்திற்குள் அனுமதிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“இவ்வாறான செயற்பாடுகள் மூலம் நாட்டின் ஜனநாயக முறைமையையும் எதிர்க்கட்சியையும் இல்லாதொழிக்க முயற்சிக்கின்றனர். இதன்மூலம் நாட்டின் அரசியலமைப்பும் மக்களின் இறையாண்மையும் சீரழிக்கப்படுகின்றன” என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், “நாடு எங்கிருந்து ஆட்சி செய்யப்படுகிறது? பாராளுமன்றத்திலிருந்தா அல்லது பெலவத்தையிலிருந்தா?” என கேள்வியெழுப்பிய அவர், தற்போதைய சூழ்நிலையில் மக்களின் இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
ஜனநாயகத்தையும் எதிர்க்கட்சியையும் அடக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் – ரணில் குற்றச்சாட்டு தற்போதைய அரசாங்கம் நாட்டின் ஜனநாயக முறைமையையும் எதிர்க்கட்சியையும் அடக்கும் செயற்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இன்று (06) இடம்பெற்ற நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் இடையூறுகளும் விதிக்கப்படுவதுடன், எவ்வித காரணமும் இன்றி அரசியல்வாதிகள் கைது செய்யப்படுவதாகவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.மேலும், சுயாதீன தொழிற்சங்கங்களை அடக்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.சட்டத்தரணிகள் சங்கம், வைத்தியர்கள் மற்றும் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு எதிராகவும் அரசாங்கம் தற்போது செயற்படத் தொடங்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை தமது கட்சி எதிர்த்ததற்கு, அதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து அரசாங்கம் குறிப்பிடாததே காரணம் எனவும் அவர் கூறியுள்ளார். இதன் சட்டபூர்வ தன்மையை உறுதிப்படுத்துவதற்காக நீதிமன்றத்தின் ஊடாக சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்கு உரிய முறையில் பேசுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ராஜீவ் அமரசூரியவை அழைத்திருந்த சந்தர்ப்பத்தில், அவரை பாராளுமன்றத்திற்குள் அனுமதிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.“இவ்வாறான செயற்பாடுகள் மூலம் நாட்டின் ஜனநாயக முறைமையையும் எதிர்க்கட்சியையும் இல்லாதொழிக்க முயற்சிக்கின்றனர். இதன்மூலம் நாட்டின் அரசியலமைப்பும் மக்களின் இறையாண்மையும் சீரழிக்கப்படுகின்றன” என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.மேலும், “நாடு எங்கிருந்து ஆட்சி செய்யப்படுகிறது பாராளுமன்றத்திலிருந்தா அல்லது பெலவத்தையிலிருந்தா” என கேள்வியெழுப்பிய அவர், தற்போதைய சூழ்நிலையில் மக்களின் இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.