மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோனுக்கும், சீனா மக்கள் குடியரசின் தூது குழுவினருக்குமிடையிலான சந்திப்பொன்று கண்டியிலுள்ள ஆளுநர் காரியாலயத்தில் நடைபெற்றது.
சீனாவின் தேசிய இனங்கள் ஆணைக்குழு அமைச்சர் பென் யூ (Pan Yue) தலைமையில் இந்த சீனக் குழுவினர் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளனர். இச் சந்திப்பில், சீனாவின் உதவியுடன் மத்திய மாகாணத்தில் மேற்கொள்ளக் கூடிய திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், சுற்றுலாத்துறை அபிவிருத்தி, சுற்றுலாத்துறையினரை கண்டிக்கு அழைத்து வருவது, இரு நாடுகளுக்குமிடையே காணப்படுகின்ற பௌத்த, சமய கலாசார உறவுகளையும் உயர் கல்வித்துறையையும் அபிவிருத்தி செய்வது மற்றும் சீனாவில் மேற்கொள்ளக்கூடிய உயர் கல்விக்கான புலமைப்பரிசில் திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இச்சந்திப்பில், சீனாவின் தேசிய இனங்கள் தொடர்பான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் வே கொசிங் (WEI Guoxiong) பணிப்பாளர் கியூ பெங் (QIU Peng) பிரதிப்பணிப்பாளர், சென் சிங்கொங் (CHEN Xicong) மற்றும் சீனாவின் மின்சு பல்கலைக்கழக வெகுஜன தொடர்பு பிரிவின் உதவித் தலைவர் கியூ கியாங் (QU Qiang) உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மத்திய மாகாண ஆளுநர் சீன தூதுக் குழுவுடன் சந்திப்பு மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோனுக்கும், சீனா மக்கள் குடியரசின் தூது குழுவினருக்குமிடையிலான சந்திப்பொன்று கண்டியிலுள்ள ஆளுநர் காரியாலயத்தில் நடைபெற்றது.சீனாவின் தேசிய இனங்கள் ஆணைக்குழு அமைச்சர் பென் யூ (Pan Yue) தலைமையில் இந்த சீனக் குழுவினர் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளனர். இச் சந்திப்பில், சீனாவின் உதவியுடன் மத்திய மாகாணத்தில் மேற்கொள்ளக் கூடிய திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.மேலும், சுற்றுலாத்துறை அபிவிருத்தி, சுற்றுலாத்துறையினரை கண்டிக்கு அழைத்து வருவது, இரு நாடுகளுக்குமிடையே காணப்படுகின்ற பௌத்த, சமய கலாசார உறவுகளையும் உயர் கல்வித்துறையையும் அபிவிருத்தி செய்வது மற்றும் சீனாவில் மேற்கொள்ளக்கூடிய உயர் கல்விக்கான புலமைப்பரிசில் திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.இச்சந்திப்பில், சீனாவின் தேசிய இனங்கள் தொடர்பான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் வே கொசிங் (WEI Guoxiong) பணிப்பாளர் கியூ பெங் (QIU Peng) பிரதிப்பணிப்பாளர், சென் சிங்கொங் (CHEN Xicong) மற்றும் சீனாவின் மின்சு பல்கலைக்கழக வெகுஜன தொடர்பு பிரிவின் உதவித் தலைவர் கியூ கியாங் (QU Qiang) உட்பட பலர் கலந்துகொண்டனர்.