• Dec 13 2024

கிழக்கு மாகாண ஆளுநர் - ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்துக்கான பிரதிநிதி சந்திப்பு

Chithra / Dec 11th 2024, 9:40 am
image


கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்துக்கான பிரதிநிதி குன்லே அதெனிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று  இடம்பெற்றது.

கலந்துரையாடலின் போது, கிழக்கு மாகாணத்தில் உள்ள சமூகங்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முன்முயற்சிகளுக்கு ஆதரவளிக்க பல்வேறு பங்குதாரர்களுடன் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அதேனி உறுதியளித்தார்.

பெண்கள் மற்றும் சிறுமிகளின் ஆரோக்கியம், பாலின சமத்துவம் மற்றும் காலநிலை மீள்தன்மை போன்ற முக்கிய துறைகளில் கவனம் செலுத்துவதை அவர் முன்னிலைப்படுத்தியதோடு, இந்த முயற்சிகளில் ஆளுநரின் தொடர்ச்சியான ஆதரவினை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த ஆளுநர், 

கிழக்கு மாகாணத்தின் பல்கலாச்சாரத் தன்மையை அங்கீகரித்து, அதன் பன்முகத்தன்மையை பலமாகப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

மேலும், மாகாணத்தில் சமூக மற்றும் இன நல்லிணக்கத்தையும், பாலின சமத்துவத்தையும் மேம்படுத்துவதே தனது முதன்மையான கவனம் என்று கூறிய ஆளுநர், குடும்ப வன்முறைகள் அதிகமாக இருப்பதையும் சுட்டிக்காட்டி, பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். 

ஆளுநரின் தலைமையில் கிழக்கு மாகாணம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையும் என்றும் அவர் அதெனி நம்பிக்கை தெரிவித்தார்.


கிழக்கு மாகாண ஆளுநர் - ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்துக்கான பிரதிநிதி சந்திப்பு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்துக்கான பிரதிநிதி குன்லே அதெனிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று  இடம்பெற்றது.கலந்துரையாடலின் போது, கிழக்கு மாகாணத்தில் உள்ள சமூகங்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முன்முயற்சிகளுக்கு ஆதரவளிக்க பல்வேறு பங்குதாரர்களுடன் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அதேனி உறுதியளித்தார்.பெண்கள் மற்றும் சிறுமிகளின் ஆரோக்கியம், பாலின சமத்துவம் மற்றும் காலநிலை மீள்தன்மை போன்ற முக்கிய துறைகளில் கவனம் செலுத்துவதை அவர் முன்னிலைப்படுத்தியதோடு, இந்த முயற்சிகளில் ஆளுநரின் தொடர்ச்சியான ஆதரவினை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இதற்குப் பதிலளித்த ஆளுநர், கிழக்கு மாகாணத்தின் பல்கலாச்சாரத் தன்மையை அங்கீகரித்து, அதன் பன்முகத்தன்மையை பலமாகப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், மாகாணத்தில் சமூக மற்றும் இன நல்லிணக்கத்தையும், பாலின சமத்துவத்தையும் மேம்படுத்துவதே தனது முதன்மையான கவனம் என்று கூறிய ஆளுநர், குடும்ப வன்முறைகள் அதிகமாக இருப்பதையும் சுட்டிக்காட்டி, பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். ஆளுநரின் தலைமையில் கிழக்கு மாகாணம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையும் என்றும் அவர் அதெனி நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement