• Dec 09 2024

பட்டம் வீட்டில் பட்டதாரி ரோட்டில்- திருமலையில் பட்டதாரிகள் போராட்டம்...!

Sharmi / Jul 2nd 2024, 1:37 pm
image

தமக்கான பட்டதாரி நியமனங்களை வழங்குமாறு கோரி திருகோணமலை மாவட்ட பட்டதாரிகள் இன்று(02) காலை திருகோணமலை கடற்கரை வீதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரி மாணவர்கள்,  வேண்டும் வேண்டும் வேலை வேண்டும், அழிக்காதே அழிக்காதே எதிர்காலத்தை அழிக்காதே, பட்டம் வீட்டில் பட்டதாரி ரோட்டில், ஆக்காதே ஆக்காதே மனநோயாளி ஆக்காதே, பாடசாலை முடிக்க 13 வருடம் பட்டம் முடிக்க 04 வருடம் பாதையில் நிற்க எத்தனை வருடம்?? , பேசியது போதும்

தொழில் வழங்கு உள்ளிட்ட வாசகங்களை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது கிழக்கு ஆளுநர் செயலக முன்றலில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன், ஆளுநர் செயலகத்தில் பட்டதாரிகளால் மகஜரும் கையளிக்கப்பட்டது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பட்டதாரி மாணவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 







பட்டம் வீட்டில் பட்டதாரி ரோட்டில்- திருமலையில் பட்டதாரிகள் போராட்டம். தமக்கான பட்டதாரி நியமனங்களை வழங்குமாறு கோரி திருகோணமலை மாவட்ட பட்டதாரிகள் இன்று(02) காலை திருகோணமலை கடற்கரை வீதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரி மாணவர்கள்,  வேண்டும் வேண்டும் வேலை வேண்டும், அழிக்காதே அழிக்காதே எதிர்காலத்தை அழிக்காதே, பட்டம் வீட்டில் பட்டதாரி ரோட்டில், ஆக்காதே ஆக்காதே மனநோயாளி ஆக்காதே, பாடசாலை முடிக்க 13 வருடம் பட்டம் முடிக்க 04 வருடம் பாதையில் நிற்க எத்தனை வருடம் , பேசியது போதும்தொழில் வழங்கு உள்ளிட்ட வாசகங்களை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்போது கிழக்கு ஆளுநர் செயலக முன்றலில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன், ஆளுநர் செயலகத்தில் பட்டதாரிகளால் மகஜரும் கையளிக்கப்பட்டது.இவ் ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பட்டதாரி மாணவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement