• Aug 11 2025

திடீரென ஆர்ப்பாட்டத்தில் குதித்த பட்டதாரிகள்; தடுக்க முயன்ற பொலிஸார்- பத்தரமுல்லையில் பதற்றம்!

shanuja / Aug 11th 2025, 6:05 pm
image

திடீரென ஆர்ப்பாட்டத்தில்

குதித்த பட்டதாரிகள் 


தடுக்க முயன்ற பொலிஸார் 

பத்தரமுல்லையில் பதற்றம்  




பத்தரமுல்லை - பெலவத்தை பகுதியில்  பட்டதாரிகளால் இன்று பிற்பகல் போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டது.

                                                                                                                                                                     வேலையற்ற பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பை வழங்குங்கள் என்ற தொனிப்பொருளில் பட்டதாரிகள் போராட்டத்தை முன்னெடுத்தனர் 

                                                                                                                                                                                          இந்த ஆர்ப்பாட்டம்,  பெலவத்தையில் அமைந்துள்ள ஆளுங் கட்சியின் தலைமை காரியாலயத்துக்கு செல்லும் வீதியை மறித்தவாறு முன்னெடுக்கப்பட்டிருந்தது.


நீண்ட காலமாகியும் உரிய தொழில் கிடைக்காமல் இருக்கும் பல பட்டதாரிகள் இணைந்து குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். 


இதன்போது நீண்டகாலமாகத் தமக்கு தொழில் வழங்கவில்லை என்று தெரிவித்து பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். 


இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்தும் முன்னேறிச் செல்ல முற்பட்டபோது,  பொலிஸார்  அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர்.


இதன் காரணமாக  பொலிஸாருக்கும் பட்டதாரிகளுக்கும் இடையே முறுகல் ஏற்பட குறித்த பகுதியில் சில நேரம் பதற்ற சூழல் ஏற்பட்டது.

திடீரென ஆர்ப்பாட்டத்தில் குதித்த பட்டதாரிகள்; தடுக்க முயன்ற பொலிஸார்- பத்தரமுல்லையில் பதற்றம் திடீரென ஆர்ப்பாட்டத்தில்குதித்த பட்டதாரிகள் தடுக்க முயன்ற பொலிஸார் பத்தரமுல்லையில் பதற்றம்  பத்தரமுல்லை - பெலவத்தை பகுதியில்  பட்டதாரிகளால் இன்று பிற்பகல் போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டது.                                                                                                                                                                     வேலையற்ற பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பை வழங்குங்கள் என்ற தொனிப்பொருளில் பட்டதாரிகள் போராட்டத்தை முன்னெடுத்தனர்                                                                                                                                                                                           இந்த ஆர்ப்பாட்டம்,  பெலவத்தையில் அமைந்துள்ள ஆளுங் கட்சியின் தலைமை காரியாலயத்துக்கு செல்லும் வீதியை மறித்தவாறு முன்னெடுக்கப்பட்டிருந்தது.நீண்ட காலமாகியும் உரிய தொழில் கிடைக்காமல் இருக்கும் பல பட்டதாரிகள் இணைந்து குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இதன்போது நீண்டகாலமாகத் தமக்கு தொழில் வழங்கவில்லை என்று தெரிவித்து பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்தும் முன்னேறிச் செல்ல முற்பட்டபோது,  பொலிஸார்  அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர்.இதன் காரணமாக  பொலிஸாருக்கும் பட்டதாரிகளுக்கும் இடையே முறுகல் ஏற்பட குறித்த பகுதியில் சில நேரம் பதற்ற சூழல் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement