கடந்த 15 ஆம் திகதி கிராண்ட்பாஸ் பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை நேற்று (16) பிற்பகல் வெல்லம்பிட்டி பகுதியில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 16 முதல் 44 வயதுக்குட்பட்ட வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிசார் தெரிவித்தனர்.
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போதே இக்கொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 02 கத்திகளையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்
கிராண்ட்பாஸ் இரட்டைக் கொலை சம்பவம் – இதுவரை 8 பேர் கைது கடந்த 15 ஆம் திகதி கிராண்ட்பாஸ் பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை நேற்று (16) பிற்பகல் வெல்லம்பிட்டி பகுதியில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 16 முதல் 44 வயதுக்குட்பட்ட வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிசார் தெரிவித்தனர்.இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போதே இக்கொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளது.இந்த குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 02 கத்திகளையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்