• Apr 01 2025

உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவிற்கு அமைச்சர்கள் குழு அனுமதி

Chithra / Dec 10th 2024, 11:03 am
image

 

நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து உணவுப் பொருட்களையும் உற்பத்தி செய்வது உள்ளிட்ட பல முன்மொழிவுகள் அமைச்சர்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, குறைந்தபட்சம் 03 மாதங்களுக்கு போதுமான அத்தியாவசிய உணவுப் பஃபர் இருப்புகளைப் பேணுவதற்கு, நாட்டில் தற்போதுள்ள உணவுப் பங்குகள் பற்றிய தரவு அமைப்பைப் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், உணவுப் பாதுகாப்பிற்கு உதவியாக இருக்கும் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம், மொத்த விற்பனை மற்றும் சில்லறை வர்த்தகம் ஆகிய நடவடிக்கைகளுக்கு தனியார் துறையின் பங்களிப்புடன் பயனுள்ள திட்டத்தை தயாரித்து செயல்படுத்துவதும் அவற்றில் முதன்மையான பணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் “உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு” அமைக்க அமைச்சர்கள் குழு அனுமதி அளித்துள்ளது.

உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவிற்கு அமைச்சர்கள் குழு அனுமதி  நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து உணவுப் பொருட்களையும் உற்பத்தி செய்வது உள்ளிட்ட பல முன்மொழிவுகள் அமைச்சர்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதன்படி, குறைந்தபட்சம் 03 மாதங்களுக்கு போதுமான அத்தியாவசிய உணவுப் பஃபர் இருப்புகளைப் பேணுவதற்கு, நாட்டில் தற்போதுள்ள உணவுப் பங்குகள் பற்றிய தரவு அமைப்பைப் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.மேலும், உணவுப் பாதுகாப்பிற்கு உதவியாக இருக்கும் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம், மொத்த விற்பனை மற்றும் சில்லறை வர்த்தகம் ஆகிய நடவடிக்கைகளுக்கு தனியார் துறையின் பங்களிப்புடன் பயனுள்ள திட்டத்தை தயாரித்து செயல்படுத்துவதும் அவற்றில் முதன்மையான பணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.அதன்படி, ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் “உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு” அமைக்க அமைச்சர்கள் குழு அனுமதி அளித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement