பொரளை, சஹஸ்புரவிலுள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்துக்கருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு நடத்தப்பட்ட இத் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் களனியைச் சேர்ந்த 23 வயதுடையவர் எனவும் காயமடைந்த அனைவரும் 21- 23 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காயமடைந்த மற்றைய நான்கு பேரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் டி-56 ரக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை,
இருப்பினும் இந்த சம்பவம் பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இன்று நடைபெறவிருந்த கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்து கொண்டிருந்தவர்களை குறிவைத்தே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையில் ஐந்து பேர் மீது துப்பாக்கிச் சூடு; பலியான இளைஞனின் உயிர் பொரளை, சஹஸ்புரவிலுள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்துக்கருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு நடத்தப்பட்ட இத் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் களனியைச் சேர்ந்த 23 வயதுடையவர் எனவும் காயமடைந்த அனைவரும் 21- 23 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.காயமடைந்த மற்றைய நான்கு பேரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் டி-56 ரக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை, இருப்பினும் இந்த சம்பவம் பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.இன்று நடைபெறவிருந்த கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்து கொண்டிருந்தவர்களை குறிவைத்தே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.