• Nov 24 2024

இலங்கையில் இலவசக்கல்வி மையங்களை நிறுவ பிரதமரிடம் உறுதியளித்த குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்!

Tharun / May 19th 2024, 12:28 pm
image

உலகளாவிய சமாதானத் தூதுவர், ஆன்மீகத் தலைவர், வாழும் கலை மன்றத்தின் நிறுவனர் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இன்று (18) அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டார்.


குறித்த சந்திப்பானது, இன்று அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது. 

இந்த சந்திப்பின் போது  இளைஞர் யுவதிகளின் திறன்களை மேம்படுத்துவதற்காக இலங்கையில் இலவச கல்வி நிலையங்களை நிறுவ தனது மன்றம் திட்டமிட்டுள்ளதாக குருதேவ் கூறினார்.


மேலும் ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவ விருப்பம் தெரிவித்தார். இந்த மன்றம் மட்டக்களப்பு மற்றும் வெல்லவாயவில் இரண்டு சிறுவர் இல்லங்களை நிறுவியுள்ளது.


இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த வீரசிங்க, யதாமினி குணவர்தன, கலாநிதி என். ராமானுஜம், வினோத் முனசிங்க, மது ராவ் மற்றும் வாழும் கலை மன்றத்தின் முன்னணி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கையில் இலவசக்கல்வி மையங்களை நிறுவ பிரதமரிடம் உறுதியளித்த குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உலகளாவிய சமாதானத் தூதுவர், ஆன்மீகத் தலைவர், வாழும் கலை மன்றத்தின் நிறுவனர் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இன்று (18) அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டார்.குறித்த சந்திப்பானது, இன்று அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது  இளைஞர் யுவதிகளின் திறன்களை மேம்படுத்துவதற்காக இலங்கையில் இலவச கல்வி நிலையங்களை நிறுவ தனது மன்றம் திட்டமிட்டுள்ளதாக குருதேவ் கூறினார்.மேலும் ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவ விருப்பம் தெரிவித்தார். இந்த மன்றம் மட்டக்களப்பு மற்றும் வெல்லவாயவில் இரண்டு சிறுவர் இல்லங்களை நிறுவியுள்ளது.இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த வீரசிங்க, யதாமினி குணவர்தன, கலாநிதி என். ராமானுஜம், வினோத் முனசிங்க, மது ராவ் மற்றும் வாழும் கலை மன்றத்தின் முன்னணி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement