ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை போன்றே ஹரிணி அமரசூரியவும் எங்களுக்கு பெறுமதிமிக்க அரசியல் சொத்தாவார் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நிகழ்வொன்றின் பினனர் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மக்கள் விடுதலை முன்னணி என சகலரும் பல வருடங்கள் ஒன்றாக கடமையாற்றியுள்ளோம். எங்களுக்குள் புரிந்துணர்வு இருக்கிறது. ஒன்றாக கடமையாற்றி தோல்விகளை சந்தித்து தற்போது வெற்றிப் பெற்றுள்ளோம். எங்களுக்கு இடையில் எந்த வேறுபாடும் இல்லை. நாங்கள் ஒன்றாகவே இருக்கிறோம்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை போன்றே ஹரிணி அமரசூரியவும் எங்களுக்கு பெறுமதிமிக்க அரசியல் சொத்தாகும். அவர் மிகவும் முக்கியமான அரசியல் சொத்து.
மிகவும் அன்புடன் மிக நெருக்கத்துடன் பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். நாங்கள் பிரியும் நாளை எதிர்பார்த்து சஜித்தும் நாமலும் அழுது அழுது இருக்க முடியும். அவர்களே பிளவடைந்துள்ளார்கள். எனவே, நேரத்தை வீணக்காமல் இருக்குமாறு கோருகிறோம். என்றார்.
இதேவேளை சுப்ரிம் செய்மதி தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு தகவல் வழங்கிய அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அநுரவை போன்று ஹரிணியும் பெறுமதிமிக்க அரசியல் சொத்து - அமைச்சர் புகழாரம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை போன்றே ஹரிணி அமரசூரியவும் எங்களுக்கு பெறுமதிமிக்க அரசியல் சொத்தாவார் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நிகழ்வொன்றின் பினனர் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மக்கள் விடுதலை முன்னணி என சகலரும் பல வருடங்கள் ஒன்றாக கடமையாற்றியுள்ளோம். எங்களுக்குள் புரிந்துணர்வு இருக்கிறது. ஒன்றாக கடமையாற்றி தோல்விகளை சந்தித்து தற்போது வெற்றிப் பெற்றுள்ளோம். எங்களுக்கு இடையில் எந்த வேறுபாடும் இல்லை. நாங்கள் ஒன்றாகவே இருக்கிறோம். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை போன்றே ஹரிணி அமரசூரியவும் எங்களுக்கு பெறுமதிமிக்க அரசியல் சொத்தாகும். அவர் மிகவும் முக்கியமான அரசியல் சொத்து. மிகவும் அன்புடன் மிக நெருக்கத்துடன் பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். நாங்கள் பிரியும் நாளை எதிர்பார்த்து சஜித்தும் நாமலும் அழுது அழுது இருக்க முடியும். அவர்களே பிளவடைந்துள்ளார்கள். எனவே, நேரத்தை வீணக்காமல் இருக்குமாறு கோருகிறோம். என்றார். இதேவேளை சுப்ரிம் செய்மதி தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு தகவல் வழங்கிய அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.