நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் பலத்த மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக, ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றங்களில் இன்று (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த அனைத்து வழக்குகளும் எதிர்வரும் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நிலவும் மழைக்காலநிலையால் நீதிமன்ற ஊழியர்கள், வழக்குகளுக்காக முன்னிலையாகும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் வழக்குத் தரப்பினர்கள் நீதிமன்றத்திற்கு வருவதில் போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இதனையடுத்து, ஹட்டன் நீதிமன்றங்களில் பணியாற்றும் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, குறித்த வழக்குகளை வேறு திகதிக்கு ஒத்திவைக்க நீதவான்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பலத்த மழை காரணமாக ஹட்டன் நீதிமன்ற வழக்குகள் ஒத்திவைப்பு நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் பலத்த மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக, ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றங்களில் இன்று (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த அனைத்து வழக்குகளும் எதிர்வரும் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.நிலவும் மழைக்காலநிலையால் நீதிமன்ற ஊழியர்கள், வழக்குகளுக்காக முன்னிலையாகும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் வழக்குத் தரப்பினர்கள் நீதிமன்றத்திற்கு வருவதில் போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.இதனையடுத்து, ஹட்டன் நீதிமன்றங்களில் பணியாற்றும் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, குறித்த வழக்குகளை வேறு திகதிக்கு ஒத்திவைக்க நீதவான்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.