நாளாந்தம் சாமிமலை நகரில் இருந்து காலை 6.15 மணிக்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்ட அரச பேருந்து காட்மோர் மஸ்கெலியா சேவையில் ஈடு படுத்த பட்ட அரச பேருந்து சேவைகள் மற்றும் சாமிமலை நகரில் இருந்து அதிகாலை வேளையில் கண்டி செல்லும் அரசு பேருந்து சேவைகள் கடந்த சில நாட்களாக முறையாக ஈடுபடுத்தாததால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள் நோயாளிகள் அரச உத்தியோகத்தர்கள் பாரிய தாக்கத்தை எதிர் கொள்ள நேரிட்டு உள்ளது.
மாதாந்தம் முன் கூட்டியே பயண சீட்டைப் பெற்ற பாடசாலை மாணவர்கள் மீண்டும் பணம் கொடுத்து தனியார் பேருந்துகளில் பயணிக்கும் நிலையில் உள்ளதாகவும் குறித்த அரச பேருந்து சேவைகள் இல்லாத காரணத்தால் பாடசாலைகளுக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாது உள்ளது என புகார் தெரிவித்துள்ளனர்.
காலை வேளையில் குறித்த அரச பேருந்து இல்லாத காரணத்தால் அதிகளவில் பயணிகள் பாடசாலை மாணவர்களை ஏற்றி கொண்டு தனியார் பேருந்துகளில் பயணிக்கும் ஒவ்வொரு பயணியும் மிகவும் பீதியுடன் பயனம் மேற் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட ஹட்டன் அரச பேருந்து நிலைய பொறுப்பதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது.
ஹட்டன் அரச பேருந்து நிலையத்தில் 77 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்த முடியும் ஆனால் எமது அரச பேருந்து நிலைய பகுதியில் சேவையில் ஈடுபடுத்த குறைந்த பட்சம் 110 பேருந்து தேவை.
எம்மிடம் உள்ள அரச பேருந்து அனைத்தும் பழமையான பேருந்துகள் மக்களின் நலன் கருதி ஹட்டன் அரச பேருந்து நிலையத்திற்கு குறைந்த பட்சம் புதிய பேருந்து 25 வழங்கும் பட்சத்தில் ஒரளவு முறையான சேவையை எம்மால் வழங்க முடியும் என தெரிவித்தார்.
ஹட்டன் அரச பேருந்து சேவை சீரின்மை - பாடசாலை மாணவர்கள் முறைப்பாடு நாளாந்தம் சாமிமலை நகரில் இருந்து காலை 6.15 மணிக்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்ட அரச பேருந்து காட்மோர் மஸ்கெலியா சேவையில் ஈடு படுத்த பட்ட அரச பேருந்து சேவைகள் மற்றும் சாமிமலை நகரில் இருந்து அதிகாலை வேளையில் கண்டி செல்லும் அரசு பேருந்து சேவைகள் கடந்த சில நாட்களாக முறையாக ஈடுபடுத்தாததால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள் நோயாளிகள் அரச உத்தியோகத்தர்கள் பாரிய தாக்கத்தை எதிர் கொள்ள நேரிட்டு உள்ளது.மாதாந்தம் முன் கூட்டியே பயண சீட்டைப் பெற்ற பாடசாலை மாணவர்கள் மீண்டும் பணம் கொடுத்து தனியார் பேருந்துகளில் பயணிக்கும் நிலையில் உள்ளதாகவும் குறித்த அரச பேருந்து சேவைகள் இல்லாத காரணத்தால் பாடசாலைகளுக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாது உள்ளது என புகார் தெரிவித்துள்ளனர்.காலை வேளையில் குறித்த அரச பேருந்து இல்லாத காரணத்தால் அதிகளவில் பயணிகள் பாடசாலை மாணவர்களை ஏற்றி கொண்டு தனியார் பேருந்துகளில் பயணிக்கும் ஒவ்வொரு பயணியும் மிகவும் பீதியுடன் பயனம் மேற் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து சம்பந்தப்பட்ட ஹட்டன் அரச பேருந்து நிலைய பொறுப்பதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது.ஹட்டன் அரச பேருந்து நிலையத்தில் 77 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்த முடியும் ஆனால் எமது அரச பேருந்து நிலைய பகுதியில் சேவையில் ஈடுபடுத்த குறைந்த பட்சம் 110 பேருந்து தேவை.எம்மிடம் உள்ள அரச பேருந்து அனைத்தும் பழமையான பேருந்துகள் மக்களின் நலன் கருதி ஹட்டன் அரச பேருந்து நிலையத்திற்கு குறைந்த பட்சம் புதிய பேருந்து 25 வழங்கும் பட்சத்தில் ஒரளவு முறையான சேவையை எம்மால் வழங்க முடியும் என தெரிவித்தார்.