பிலியந்தல போகுந்தர பகுதியில் இரண்டு கிலோ கிராமிற்கும் அதிகளவான ஹெரோயின் போதைப்பொருள் தொகையுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொரட்டுவை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பின் போது இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அவர்களிடம் இருந்து 2.106 கிலோகிராம் ஹெரோயின், 478 கிராம் ஐஸ் மற்றும் போதைப்பொருளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் விசேட அதிரடிப்படையினர் பறிமுதல் செய்தனர்.
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான "களுபோவில அவிஷ்க"வின் முக்கிய உதவியாளரான "களுபோவில சுட்டி" மற்றும் அவரது மூத்த சகோதரருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
24 மற்றும் 25 வயதுடைய சந்தேக நபர்கள் பிலியந்தல பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
போதைப்பொருளுடன் களுபோவில சுட்டியும் அவரது சகோதரனும் கைது பிலியந்தல போகுந்தர பகுதியில் இரண்டு கிலோ கிராமிற்கும் அதிகளவான ஹெரோயின் போதைப்பொருள் தொகையுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொரட்டுவை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பின் போது இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து 2.106 கிலோகிராம் ஹெரோயின், 478 கிராம் ஐஸ் மற்றும் போதைப்பொருளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் விசேட அதிரடிப்படையினர் பறிமுதல் செய்தனர். வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான "களுபோவில அவிஷ்க"வின் முக்கிய உதவியாளரான "களுபோவில சுட்டி" மற்றும் அவரது மூத்த சகோதரருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 24 மற்றும் 25 வயதுடைய சந்தேக நபர்கள் பிலியந்தல பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.