• Jan 31 2025

மூதூரில் மக்களின் குடியிருப்புக்களில் சுகாதார துறையினர் திடீர் சோதனை..!

Sharmi / Jan 29th 2025, 10:17 am
image

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள தோப்பூர் பிரதேசத்தில்  உள்ள மக்களின் குடியிருப்பு பகுதிகளில் டெங்கு பரிசோதனையும், ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் செயற்பாடும் இன்று(29)காலை முன்னெடுக்கப்பட்டது.

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முகைதீனின் ஆலோசனைக்கமைவாக வீடுகள், பொது இடங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

இதன் போது டெங்கு பரவும் வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஆலோசனையும் வழங்கப்பட்டன.

இவ் விசேட டெங்கு பரிசோதனையில் மூதூர் சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,தெளி கருவி இயக்குனர்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 











மூதூரில் மக்களின் குடியிருப்புக்களில் சுகாதார துறையினர் திடீர் சோதனை. மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள தோப்பூர் பிரதேசத்தில்  உள்ள மக்களின் குடியிருப்பு பகுதிகளில் டெங்கு பரிசோதனையும், ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் செயற்பாடும் இன்று(29)காலை முன்னெடுக்கப்பட்டது.மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முகைதீனின் ஆலோசனைக்கமைவாக வீடுகள், பொது இடங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.இதன் போது டெங்கு பரவும் வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஆலோசனையும் வழங்கப்பட்டன.இவ் விசேட டெங்கு பரிசோதனையில் மூதூர் சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,தெளி கருவி இயக்குனர்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement